மாவட்ட செய்திகள்

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 141 பேருக்கு கொரோனா + "||" + Corona for another 141 people in Nellai, Thoothukudi and Tenkasi districts

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 141 பேருக்கு கொரோனா

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 141 பேருக்கு கொரோனா
கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது.
தென்காசி,

கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் நேற்று 66 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதில் நெல்லை மாநகர பகுதிை-யைச் சேர்தவர்கள் 26 பேர், பாளையங்கோட்டை யூனியன் பகுதியைச் சேர்ந்தவர்கள் 18 பேர் ஆவர்.


மேலும் மானூர், நாங்குநேரி, வள்ளியூர், ராதாபுரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவர்களை அரசு ஆஸ்பத்திரிகள், தனியார் ஆஸ்பத்திரிகளில் தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வருகின்றனர். இதன் மூலம் நெல்லை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 238 ஆக உயர்ந்துள்ளது.

தென்காசி மாவட்டத்தில் நேற்று 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் தென்காசி, செங்கோட்டை, ஆலங்குளம், சங்கரன்கோவில் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர். தொற்று பாதிக்கப்பட்டவர்கள் அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். தென்காசி மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 7,550 ஆக உயர்ந்துள்ளது.

இதேபோன்று தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று 65 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 856 ஆக உயர்ந்து உள்ளது. இதில் 13 ஆயிரத்து 228 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பினர். மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் வீடுகளில் 505 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனாவால் இதுவரை 123 பேர் இறந்துள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

1. நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் 71 பேருக்கு கொரோனா தொற்று
நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் நேற்று 71 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
2. செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 143 பேர் பாதிப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 143 பேர் பாதிப்புக்குள்ளானார்கள்.
3. சென்டிரல் ரெயில் நிலையம் எதிரே சுரங்கப்பாதை பள்ளத்தில் கன்டெய்னர் லாரி கவிழ்ந்தது போக்குவரத்து பாதிப்பு
சென்டிரல் ரெயில் நிலையம் எதிரே சுரங்கப்பாதை பள்ளத்தில் கன்டெய்னர் லாரி கவிழ்ந்தது. இதனால் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
4. திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 109 பேருக்கு கொரோனா சிகிச்சை பலனின்றி ஒருவர் சாவு
திருப்பூர் மாவட்டத்தில் நேற்று மேலும் 109 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பலனின்றி ஒருவர் பலியாகியுள்ளார்.
5. வேலூரில் மூதாட்டி உள்பட 4 பேர் கொரோனாவுக்கு பலி
வேலூர் தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற வந்த மூதாட்டி உள்பட 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.