திருமணம் ஆன 9 மாதத்தில் பூட்டிய ஓட்டலுக்குள் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை + "||" + Young man commits suicide by hanging himself in a locked hotel 9 months after marriage
திருமணம் ஆன 9 மாதத்தில் பூட்டிய ஓட்டலுக்குள் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
திருமணம் ஆன 9 மாதத்தில் பூட்டிய ஓட்டலுக்குள் தூக்குப்போட்டு வாலிபர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.
ஊஞ்சலூர்,
பாசூரில் இருந்து சோழசிராமணி செல்லும் சாலையில் டாஸ்மாக் கடை உள்ளது. இதன் அருகில் தனியாருக்கு சொந்தமான ஓட்டல் ஒன்று ஆறு மாத காலமாக செயல்படாமல் பூட்டிய நிலையில் உள்ளது.
இந்தநிலையில் நேற்று ஓட்டலுக்குள் வாலிபர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதாக மலையம்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கொடுமுடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள்.
திருமணம்
போலீசாரின் விசாரணையில் தற்கொலை செய்துகொண்ட வாலிபர் நாமக்கல் மாவட்டம் கந்தாம்பாளையத்தை சேர்ந்த துரைசாமி என்பவரின் மகன் ஜீவானந்தம் (வயது 26) என்றும், திருச்செங்கோட்டில் உள்ள ஒரு பெயிண்ட் கடையில் வேலை பார்த்த இவருக்கு கடந்த 9 மாதங்களுக்கு முன்புதான் ரேணுகா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது என்பதும் தெரியவந்தது.
விசாரணை
ஆனால் ஜீவானந்தம் ஏன் பாசூர் வந்து பூட்டப்பட்ட ஓட்டலின் பின்பகுதி வழியாக உள்ளே சென்று தற்கொலை செய்துகொண்டார் என்று தெரியவில்லை.
இதுகுறித்து மலையம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருமணத்துக்கு பெற்றோர் வற்புறுத்தியதால் ஐ.டி. நிறுவன ஊழியர் தனது கை நரம்பை பிளேடால் அறுத்து தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது.