தஞ்சையில் நம்மாழ்வாருக்கு மணிமண்டபம் அமைக்க வலியுறுத்தி தஞ்சை கலெக்டர் அலுவலகத்துக்கு வேப்பிலையுடன் வந்த விவசாயிகள்
தஞ்சையில் நம்மாழ்வாருக்கு மணிமண்டபம் அமைக்க வலியுறுத்தி தஞ்சை கலெக்டர் அலுவலகத்துக்கு மனு அளிப்பதற்காக விவசாயிகள் வேப்பிலையுடன் வந்தனர்.
தஞ்சாவூர்,
தஞ்சை கலெக்டர் அலுவலகத்திற்கு, அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநிலத்தலைவர் தங்க சண்முகசுந்தரம் உள்ளிட்ட பல்வேறு விவசாயிகள், நேற்று கையில் வேப்பிலையுடன் வந்தனர். பின்னர் அங்கிருந்த அதிகாரிகளிடம் அவர்கள் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-
ஜெனீவா வரை சென்று நீதிமன்றத்தில் வாதாடி தமிழகத்தின் மரமான வேம்புக்கு அமெரிக்கா காப்புரிமை பெற்றிருந்த நிலையில், உரிய ஆதாரங்ளோடு வேம்புக்கான உரிமையை மீட்டெடுத்து தந்த இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாருக்கு தஞ்சையில் மணிமண்டபம் அமைக்க வேண்டும்.
மேலும், அவரின் ஆராய்ச்சி நூல்களை படித்து இளைய தலைமுறையினரும், இயற்கை ஆர்வலர்களும் வேளாண்மை பற்றியும், வேளாண் குறித்த ஆராய்ச்சிகளை செய்யும் வகையிலும் நூலகம் ஒன்றையும் ஏற்படுத்த வேண்டும். நம்மாழ்வாரின் பெயரை, கால்நடை மருத்துவக்கல்லூரிக்கு சூட்ட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
Related Tags :
Next Story