மாவட்ட செய்திகள்

பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் பொதுமக்களின் புகார்களை வீட்டிற்கு சென்று விசாரிக்கும் போலீசார் + "||" + In the Perambalur-Ariyalur districts Police who go home and investigate public complaints

பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் பொதுமக்களின் புகார்களை வீட்டிற்கு சென்று விசாரிக்கும் போலீசார்

பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் பொதுமக்களின் புகார்களை வீட்டிற்கு சென்று விசாரிக்கும் போலீசார்
பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் பொதுமக்கள் அளிக்கும் புகார்களை வீட்டிற்கு சென்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பெரம்பலூர்,

தமிழக சட்டம் -ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. ராஜேஷ்தாசின் உத்தரவின்படி, திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி.யுமான ஜெயராம், டி.ஐ.ஜி. ஆனி விஜயா ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் பொதுமக்களின் அளிக்கும் புகார் மனுக்களை நிவர்த்தி செய்ய, அவர்களின் வீட்டிற்கே போலீசார் சென்று விசாரணை செய்து குறைகளை நிவர்த்தி செய்வதற்கு நேரில் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பொது மக்கள் கொடுக்கும் புகாருக்கு விரைவாக செயல்பட்டு உடனுக்குடன் தீர்வினை ஏற்படுத்தி புகார் மனுவை முடிவுக்கு கொண்டுவரும் இந்த திட்டம் பொது மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனை அந்தந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளான நிஷா பார்த்திபன் (பெரம்பலூர்) , சீனிவாசன் (அரியலூர்) கண்காணித்து வருகின்றனர்.

இதன் மூலம் கடந்த 4-ந்தேதி முதல் நேற்று வரை பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் அளித்துள்ள புகார் மனுக்கள் மீது, நேரடியாக புகார்தாரர்களின் வீட்டிற்கே சென்று இரு தரப்பினரிடமும் விசாரணை செய்து தீர்வு காணப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதே போல் அரியலூர் மாவட்டத்தில் கடந்த 4-ந்தேதி முதல் நேற்று வரை மொத்தம் பொதுமக்களிடம் 59 புகார் மனுக்கள் பெறப்பட்டு, அதில் 49 மனுக்களுக்கு இரு தரப்பினருடன் விசாரணை செய்து தீர்வு காணப்பட்டுள்ளது. மீதமுள்ள மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.