ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு மேலும் ஒரு யானை வருகை
ஸ்ரீரங்கம் கோவிலுக்கு மேலும் ஒரு யானை வந்துள்ளது.
ஸ்ரீரங்கம்,
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுகிறது. இங்கு ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடைபெறும். இக்கோவிலில் ஆண்டாள் என்ற 45 வயது யானை கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக சேவை செய்து வருகிறது.
இந்த நிலையில் கோவையை சேர்ந்த பிரபல மில்லுக்கு சொந்தமான சீனிவாசபெருமாள் கோவிலில் 20 வயதுடைய பிரேமி என்ற லட்சுமி யானை சேவை செய்து வந்தது.
அந்த யானை இந்துசமய அறநிலையத்துறை மற்றும் வனத்துறையின் ஒப்புதல் பெற்று ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு வழங்கப்பட்டது. நேற்று அதிகாலை கோவையில் இருந்து லாரியில் ஏற்றி அழைத்து வரப்பட்ட யானை பிரேமி, காலை 10 மணிக்கு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு வந்து சேர்ந்தது.
அதற்கு கோவில் நிர்வாகம் சார்பில் பெருமாள் மாலை அணிவிக்கப்பட்டு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த யானைக்கு பயிற்சி அளிக்கப்பட்டு கோவில் பணிகளில் ஈடுபடுத்தப்படும் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
Related Tags :
Next Story