கோவிலில் பூஜை செய்வது தொடர்பான தகராறில் சித்தப்பாவை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை - சிவகங்கை கோர்ட்டு உத்தரவு


கோவிலில் பூஜை செய்வது தொடர்பான தகராறில் சித்தப்பாவை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை - சிவகங்கை கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 8 Oct 2020 5:30 AM GMT (Updated: 8 Oct 2020 5:19 AM GMT)

கோவிலில் பூஜை செய்வது தொடர்பான தகராறில் சித்தப்பாவை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து சிவகங்கை கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

சிவகங்கை,

சிவகங்கை அடுத்த கோமாளிபட்டி அருகே உள்ள தென்னம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வைத்தி (வயது60). இவர் அதே ஊரில் உள்ள வெள்ளையப்பன் சாமி கோவிலில் பூசாரியாக பணிபுரிந்தார். வைத்திக்கும் அவருடைய அண்ணன் மகனான பம்பை கண்ணன் (40) என்பவருக்கும் கோவிலில் பூஜை உள்ளிட்ட பணிபுரிவது தொடர்பாக ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்தது.

இந்தநிலையில் கடந்த 2012-ம் ஆண்டு ஜூன் மாதம் 27-ந் தேதி இரவு 10.15 மணி அளவில் பம்பை கண்ணன் வைத்தியின் வீட்டிற்கு சென்று அவரை கொலை செய்தார். பின்னர் அவரது கழுத்தில் கயிறு கட்டி தூக்கில் தொங்குவது போல செய்து விட்டு தப்பி சென்றுவிட்டார். இதுதொடர்பாக சிவகங்கை நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து பம்பை கண்ணனை கைது செய்தனர்.

அவர் மீது சிவகங்கையில் உள்ள கூடுதல் செசன்சு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி ரபி குற்றம் சாட்டப்பட்ட பம்பை கண்ணனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.

Next Story