மாவட்டத்தில் மேலும் 37 பேருக்கு கொரோனா


மாவட்டத்தில் மேலும் 37 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 8 Oct 2020 11:00 AM IST (Updated: 8 Oct 2020 10:49 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று மேலும் 37 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன் தினம் வரை 2 லட்சத்து 45 ஆயிரத்து 656 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் 15 ஆயிரத்து 562 பேருக்கு கொரோனா உறுதியானது.

3 ஆயிரத்து 175 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்படவில்லை. 14 ஆயிரத்து 201 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். ஒரு முகாமில் 14 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வீடுகளில் 70 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

இந்தநிலையில் நேற்று 37 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் காந்தி நகரை சேர்ந்த 29 வயது நபர், 24 வயது பெண், ஸ்டேட் பாங்க் காலனியை சேர்ந்த 30 வயது பெண், சாத்தூர் ரோட்டை சேர்ந்த 55 வயது நபர், கன்னிச்சேரி புதூரை சேர்ந்த 25 வயது நபர், முடக்கன் குளம், பட்ட மங்கலத்தை சேர்ந்த 3 பேர், புத்தனேந்தல், வலையன்குளம், பொய்யான்குளம், கூத்திப்பாறை, சிதம்பராபுரம், எரிச்சநத்தம், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் 37 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,599 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் நேற்று 1,824 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் 3,125 பேருக்கு மருத்துவ பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்படவில்லை.

நேற்றும் முற்றிலும் கிராமப்பகுதிகள், நகரை ஓட்டியுள்ள கிராமப்பகுதிகளில் தான் பாதிப்பு இருந்துள்ளது. நகர்புறங்களில் பரிசோதனை நடத்தப்படாததால் பாதிப்பு நிலவரம் தெரியாத முடியாத நிலை உள்ளது.

நகர்புறங்களில் மருத்துவ பரிசோதனை எந்த இடத்தில் நடைபெறுகிறது என முறையான அறிவிப்பு இல்லாததால் பொதுமக்கள் அதனை கேட்டு அலையும் நிலை உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் மருத்துவ பரிசோதனை நடைபெறும் இடங்களை முன்கூட்டியே தெரிவித்து, பரிசோதனை செய்ய வாய்ப்பு ஏற்படுத்தி தர வேண்டியது அவசியம் ஆகும்.

விருதுநகர் அருகே உள்ள கூத்திப்பாறை கிராமத்தில் தொடர்ந்து பாதிப்பு ஏற்பட்டு வரும் நிலையிலும், இந்த பகுதி கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்படாமல் உள்ள நிலை நீடிக்கிறது. உடனடியாக அந்த கிராமத்தில் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டியது அவசியம் ஆகும்.

Next Story