தூத்துக்குடி தாளமுத்துநகர் பகுதியில் 25 கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பு போலீஸ் சூப்பிரண்டு இயக்கி வைத்தார்
தூத்துக்குடி தாளமுத்துநகர் பகுதியில் அமைக்கப்பட்டு உள்ள 25 கண்காணிப்பு கேமராக்களை நேற்று போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் இயக்கி வைத்தார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி தாளமுத்து நகர் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட சிலுவைப்பட்டி சந்திப்பு, தாளமுத்து நகர் பஜார், ராஜபாளையம் சந்திப்பு, லூர்தம்மாள் புரம் சந்திப்பு, சோட்டையன் தோப்பு, மாதா நகர் சந்திப்பு, தாளமுத்து நகர் போலீஸ் நிலைய சந்திப்பு, டேவிஸ்புரம் சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் மொத்தம் 25 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இந்த கேமராக்கள் அனைத்தும் தாளமுத்துநகர் போலீஸ்நிலையத்துடன் இணைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.
திறப்பு விழா
இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமை தாங்கி கண்காணிப்பு கேமராக்களை இயக்கி வைத்து பேசினார்.
விழாவில் தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ், உதவி போலீஸ் சூப்பிரண்டு (பயிற்சி) அபிஷேக் குப்தா, தாளமுத்துநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி, சப்-இன்ஸ்பெக்டர்கள் மகாராஜன், விஜயகுமார், மரிய இருதயம், நாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story