மாவட்ட செய்திகள்

விடுதலையாக மறுப்பு: அமுதசுரபி ஊழியர்கள் தர்ணா + "||" + Refusal to release: Amuthasurapi staff Tarna

விடுதலையாக மறுப்பு: அமுதசுரபி ஊழியர்கள் தர்ணா

விடுதலையாக மறுப்பு: அமுதசுரபி ஊழியர்கள் தர்ணா
அரசுத் துறைகளில் அமுதசுரபிக்கு வழங்கவேண்டிய பாக்கித்தொகை ரூ.12 கோடியை வசூலித்து ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கக்கோரி அதில் பணியாற்றி வரும் ஊழியர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
புதுச்சேரி,

புதுவை அரசு சார்பு நிறுவனமான அமுதசுரபியில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கடந்த 9 மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை. அரசுத் துறைகளில் அமுதசுரபிக்கு வழங்கவேண்டிய பாக்கித்தொகை ரூ.12 கோடியை வசூலித்து ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கக்கோரி அதில் பணியாற்றி வரும் ஊழியர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.


இந்த கோரிக்கைகளுக்காக நேற்று முன்தினம் புதுவை சட்டசபையை அவர்கள் முற்றுகையிட்டனர். அவர்களை கைது செய்து அப்புறப்படுத்திய போலீசார் தீயணைப்பு நிலையம் அருகே உள்ள கரிக்குடோனில் தங்கவைத்தனர். மாலையில் அவர்களை விடுவித்தனர். ஆனால் விடுவிக்கப்பட்ட அமுதசுரபி ஊழியர்கள் அங்கிருந்து செல்ல மறுத்துவிட்டனர். நேற்று காலையிலும் தொடர்ந்து கரிக்குடோன் அருகே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார் அங்கிருந்து கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினார்கள். ஆனால் அதை ஏற்க மறுத்த அமுதசுரபி ஊழியர்கள் தொடர்ச்சியாக அங்கேயே முகாமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மீண்டும் போலீஸ் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்ததையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து ஊழியர்கள் தஞ்சையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 9 தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
2. 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் போராட்டம்
4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று சென்னை கலெக்டர் அலுவலகம் அருகில் சத்துணவு ஊழியர்கள் கருப்பு உடை அணிந்து மறியல் போராட்டம் நடத்தினர்.
3. சேலம் அமானி கொண்டலாம்பட்டியில் பரபரப்பு;கணவர் வீட்டு முன்பு இளம்பெண் தர்ணா
சேலம் அமானி கொண்டலாம்பட்டியில் கணவர் வீட்டு முன்பு இளம்பெண் தர்ணா போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
4. ஓய்வூதியர் சங்கத்தினர் தர்ணா
குடும்ப நல நிதியை ரூ.3 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த தர்ணா போராட்டம் நடைபெற்றது.
5. ஓய்வூதியர் சங்கத்தினர் தர்ணா
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று காலை கரூர் தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.