ரூ.13½ லட்சத்தில் கண்காணிப்பு கேமராக்கள் தொடக்க விழா நிகழ்ச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பங்கேற்பு


ரூ.13½ லட்சத்தில் கண்காணிப்பு கேமராக்கள் தொடக்க விழா நிகழ்ச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பங்கேற்பு
x
தினத்தந்தி 9 Oct 2020 11:34 PM GMT (Updated: 9 Oct 2020 11:34 PM GMT)

ரூ.13½ லட்சத்தில் கண்காணிப்பு கேமராக்கள் தொடக்க விழா நிகழ்ச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பங்கேற்பு.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் உளுந்தை ஊராட்சி மன்ற தலைவர் எம்.கே.ரமேஷ், உளுந்தை ஊராட்சிக்கு உட்பட்ட உளுந்தை, உளுந்தை காலனி, முத்திரிபாளையம், உப்பரபாளையம், வடுகர்காலனி, இருளர் காலனி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 7 கிலோமீட்டர் தொலைவிற்கு ரூ.13 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் முக்கிய சாலைகள் சாலை சந்திப்பு பகுதி, ரேஷன் கடை, பள்ளி வளாகம், அங்கன்வாடி, அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செல்லும் சாலை போன்ற முக்கிய இடங்களில் 97 கண்காணிப்பு கேமராக்களை பொருத்தினார்.

மேலும் இந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகும் காட்சிகள் அனைத்தும் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பொருத்தப்பட்டிருந்த பிரமாண்ட திரையில் தெரியும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா நிகழ்ச்சி உளுந்தை ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு உளுந்தை ஊராட்சி மன்ற தலைவர் எம்.கே.ரமேஷ் தலைமை தாங்கினார். கடம்பத்தூர் ஒன்றியக்குழு தலைவர் சுஜாதா சுதாகர், துணை போலீஸ் சூப்பிரண்டு துரைப்பாண்டியன், மணவாளநகர் இன்ஸ்பெக்டர் கண்ணையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் கலந்துகொண்டு உளுந்தை கிராமத்தில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்களை தொடங்கி வைத்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.





Next Story