திருப்பத்தூர் மாவட்டத்தில் 2,000 கடைகளை அடைத்து கலெக்டர் அலுவலகத்தை முடிதிருத்தும் தொழிலாளர்கள் முற்றுகை
திருப்பத்தூர் மாவட்டத்தில் 2,000 கடைகளை அடைத்து கலெக்டர் அலுவலகத்தை முடிதிருத்தும் தொழிலாளர்கள் திண்டுக்கல் மாவட்டம் சிறுமி பாலியல் பலாத்கார விவகாரத்தை சி.பி.ஐ.க்கு மாற்ற வலியுறுத்தி முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பத்தூர்,
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலையுண்ட சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தக்கோரி தமிழகம் முழுவதும் முடிதிருத்தும் தொழிலாளர்கள் கடைகளை அடைத்து நேற்று கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன்படி திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று 2 ஆயிரம் முடி திருத்தும் கடைகளை அடைக்கப்பட்டன. பின்னர் அனைத்து மருத்துவர் மக்கள் முன்னேற்றக் கழக மாவட்ட அமைப்பாளர் ஆர்.சுதாகர் தலைமையில் நகர தலைவர்கள் அன்பழகன் கார்த்திகேயன் முன்னிலையில் கலெக்டர் அலுவலகத்தை முடிதிருத்தும் தொழிலாளர்கள் முற்றுகையிட்டனர். அவர்கள் கலெக்டர் சிவன்அருளிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.
போராட்டத்தில் திருப்பத்தூர் மாவட்ட முடித்திருக்கும் நலச் சங்கம் மற்றும் இசைக் கலைஞர்கள் சங்கத்தினர்கள் அசோக், ஆனந்தன், ஜெகன், கேசவன், மணி, ராஜா, அறிவழகன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story