பல்லடத்தில், தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து சிறுவன் பலி
பல்லடத்தில் தண்ணீர் தொட்டியில் 4 வயது சிறுவன் தவறி விழுந்து பலியானான்.
பல்லடம்,
பல்லடம் அம்மாபாளையம் நேரு நகரைச் சேர்ந்தவர் ஜான் விக்டர். இவர் அந்த பகுதியில் இருசக்கர வாகனம் பழுது நீக்கும் மையம் நடத்தி வருகின்றார். இவருடைய மனைவி வசந்தி. இவர்களுக்கு 4 வயதில் கவின்குமார் என்ற மகன் இருந்தான். இந்த நிலையில் நேற்று காலை வசந்தியின் தாயார் ஈஸ்வரி தனது பேரன் கவின்குமாரை தான் வேலை செய்யும் சேடபாளையம் பகுதிக்கு அழைத்து சென்றார். அங்கு ஈஸ்வரி வேலையில் ஈடுபட்டிருந்த போது கவின்குமார் அங்கு விளையாடிக் கொண்டிருந்தான். சிறிது நேரம் கழித்து பார்க்கும் போது கவின்குமாரை காணவில்லை.
இதனையடுத்து அங்கு பணியில் இருந்தவர்கள் சுற்று வட்டாரப் பகுதிகளில் கவின் குமாரை தேடினர். அப்போது அங்கிருந்த தண்ணீர் தொட்டியில் கவின்குமார் தவறி விழுந்து கிடந்தது தெரியவந்தது. அங்கிருந்தவர்கள் உடனடியாக சிறுவனை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவன் உடலை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த அங்கு வந்த பல்லடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story