சாமி சிலைகள் ஊர்வலத்தை பாரம்பரிய முறைப்படி நடத்தக்கோரி தக்கலையில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்


சாமி சிலைகள் ஊர்வலத்தை பாரம்பரிய முறைப்படி நடத்தக்கோரி தக்கலையில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 10 Oct 2020 11:45 AM IST (Updated: 10 Oct 2020 11:39 AM IST)
t-max-icont-min-icon

நவராத்திரி விழாவையொட்டி சாமி சிலைகள் ஊர்வலத்தை பாரம்பரிய முறைப்படி நடத்த கோரி தக்கலையில் இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

பத்மநாபபுரம், 

குமரி மாவட்டத்தில் இருந்து திருவனந்தபுரத்திற்கு ஆண்டுதோறும் நவராத்திரி விழாவை முன்னிட்டு சாமி சிலைகள் யானை மீதும், பல்லக்கின் மீதும் ஊர்வலமாக கொண்டு செல்லப்படும். இந்த சாமி சிலைகளுக்கு வழிநெடுகிலும் பக்தர்கள் வரவேற்பு அளித்து பூஜைகள் செய்து வழியனுப்பி வைப்பார்கள்.

இந்த ஆண்டு கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக சாமி சிலைகள் வாகனங்களில் கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்தநிலையில், சாமி சிலைகள் ஊர்வலத்தை பாரம்பரிய முறைப்படி நடத்த கோரி இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி நேற்று மாலையில் தக்கலையில் தாலுகா அலுவலகம் முன்பு பேலஸ் ரோட்டில் ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் குவிந்தனர். அவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்து முன்னணி மாவட்ட தலைவர் மிசா சோமன் தலைமை தாங்கினார். துணை தலைவர் ராஜேஸ்வரன் வரவேற்று பேசினார். பா.ஜனதா மாவட்ட தலைவர் தர்மராஜ் உள்பட பலர் பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில் பா.ஜனதா மாவட்ட துணைத்தலைவர் ரமேஷ், முத்துராமன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். போராட்டத்தில் ஏராளமானோர் திரண்டதால் அந்த பகுதியில் போக்குவரத்து மாற்றி விடப்பட்டது. தக்கலை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story