தூத்துக்குடியில் கொரோனா பாதிப்பு 14 ஆயிரத்தை தாண்டியது: நெல்லை, தென்காசியில் புதிதாக 92 பேருக்கு தொற்று


தூத்துக்குடியில் கொரோனா பாதிப்பு 14 ஆயிரத்தை தாண்டியது: நெல்லை, தென்காசியில் புதிதாக 92 பேருக்கு தொற்று
x
தினத்தந்தி 10 Oct 2020 11:00 PM GMT (Updated: 10 Oct 2020 7:00 PM GMT)

தூத்துக்குடியில் கொரோனா பாதிப்பு 14 ஆயிரத்தை தாண்டியது. நெல்லை, தென்காசியில் புதிதாக 92 பேருக்கு தொற்று ஏற்பட்டது.

நெல்லை, 

நெல்லை மாவட்டத்தில் நேற்று 71 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில் நெல்லை மாநகர பகுதியை சேர்ந்தவர்கள் 19 பேர், பாளையங்கோட்டை யூனியன் பகுதியை சேர்ந்தவர்கள் 13 பேர் ஆவார்கள். இதுதவிர மானூர், நாங்குநேரி, ராதாபுரம், களக்காடு ஆகிய ஊர்களை சேர்ந்தவர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 13 ஆயிரத்து 436 ஆக உயர்ந்துள்ளது.

தென்காசி மாவட்டத்தில் நேற்று 21 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் தென்காசி, செங்கோட்டை, ஆலங்குளம், சங்கரன்கோவில் உள்ளிட்ட ஊர்களைச் சேர்ந்தவர்கள். தொற்று பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளைச் சுற்றி கிருமி நாசினி தெளிக்கப்பட்டு உள்ளது. இந்த மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7 ஆயிரத்து 596 ஆக உயர்ந்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று 57 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 52 ஆக உயர்ந்து உள்ளது. இதில் 13 ஆயிரத்து 412 பேர் முழுமையாக குணமடைந்து உள்ளனர். மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் வீடுகளில் 516 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனாவுக்கு இதுவரை 124 பேர் இறந்து உள்ளனர்.

Next Story