பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் பிரச்சினைகளை கண்டறிய மந்திரி சபை துணை கமிட்டி அமைக்கப்படும்: முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அறிவிப்பு
பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் பிரச்சினைகளை கண்டறிய மந்திரி சபை துணை கமிட்டி அமைக்கப்படும் என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அறிவித்து உள்ளார்.
மும்பை,
மராட்டியத்தில் மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்கி மாநில அரசு சட்டம் நிறைவேற்றியது. ஆனால் அதற்கு சுப்ரிம் கோர்ட்டு தடை விதித்து உள்ளது. இதையடுத்து மராத்தா அமைப்பினர் இடஒதுக்கீடு கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் முதல் மந்திரி உத்தவ் தாக்கரே பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் (ஒ.பி.சி.) சந்தித்து வரும் பிரச்சினைகள் குறித்த அறிய மந்திரி சபை துணை கமிட்டியை அமைக்க உள்ளார். இதுகுறித்த அறிவிப்பை அவர் நேற்று முன்தினம் அறிவித்தார்.
முதல்-மந்திரி அமைக்க உள்ள இந்த கமிட்டி பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் நலனுக்கு வழங்கப்படும் நிதி, கொரோனா பிரச்சினை காரணமாக சுகாதாரத்துறைக்கு அந்த நிதியில் எவ்வளவு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது போன்றவை குறித்து ஆய்வு செய்வார்கள். இதேபோல பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீட்டில் எந்த மாற்றமும் இருக்காது அந்த சமூக பிரதிநிதிகளிடம் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே உறுதி அளித்து உள்ளார்.
Related Tags :
Next Story