வேலாயுதம்பாளையம், தோகைமலையில் காவல்துறை சார்பில் சிறப்பு மனு விசாரணை முகாம் - 25 மனுக்களுக்கு தீர்வு
வேலாயுதம்பாளையம், தோகைமலையில் காவல்துறை சார்பில் சிறப்பு மனு விசாரணை முகாமில் 25 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.
வேலாயுதம்பாளையம்,
அரவக்குறிச்சி போலீஸ் உட்கோட்டத்தை சேர்ந்த வேலாயுதம்பாளையம் போலீஸ் நிலையம் சார்பில் வேலாயுதம்பாளையம் அருகே காந்தி திருமண மண்டபத்தில் சிறப்பு மனு விசாரணை முகாம் நடைபெற்றது. முகாமிற்கு அரவக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். வேலாயுதம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிதம்பரபாரதி முன்னிலை வகித்தார்.
வேலாயுதம்பாளையம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் போலீஸ் நிலையத்தில் கொடுத்த 20 புகார் மனுக்கள் மீது விசாரணை நடத்தும் விதமாக புகார்தாரர்கள், அவர்களின் பிரதிவாதிகள் (எதிரிகள்) ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர். ஒவ்வொரு புகார் மனுதாரர்களையும் அவர்களது பிரதிவாதி (எதிரிகள்) களையும் அழைத்து, இரு தரப்பினரையும் அமரவைத்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு கண்டனர்.
மொத்தம் 20 மனுக்கள் போலீஸ் நிலையத்தில் கொடுக்கப்பட்டிருந்தது. அந்த 20 மனுக்களில் 18 மனுக்களுக்கு அங்கு பேசி தீர்வு காணப்பட்டது. மீதி உள்ள இரண்டு மனுக்கள் மீது மீண்டும் இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும் என்று தெரிவித்தனர். முகாம் காலை 9 மணியில் இருந்து மாலை 5 மணி வரை நடைபெற்றது. முகாமில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் முருகன், சண்முகானந்தவடிவேல் மற்றும் போலீசார் புகார் மனு தாரர், அவர்கள் பிரதிவாதிகள் கலந்து கொண்டனர்.
இதேபோல் தோகைமலை போலீஸ் நிலையம் சார்பில் சிறப்பு மனு விசாரணை முகாம் நடைபெற்றது. முகாமிற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் தலைமை தாங்கினார். சப்-இன்ஸ்பெக்டர் சிதம்பரபாரதி பரமேஸ்வரன் வகித்தார். வேலாயுதம்பாளையம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் போலீஸ் நிலையத்தில் கொடுத்த 21 புகார் மனுக்கள் மீது விசாரணை நடந்தது. இதில், 7 மனுக்கள் தீர்வு காணப்பட்டது. மீதி உள்ள 13 மனுக்கள் மீண்டும் விசாரணை நடத்தி தீர்வு காணப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். முகாமில் சிறப்பு காவலர் வாசுதேவன், வீரப்பன், மகளிர் போலீசார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story