மராட்டியத்தில் புதிதாக 10 ஆயிரத்து 792 பேருக்கு கொரோனா பாதிப்பு


மராட்டியத்தில் புதிதாக 10 ஆயிரத்து 792 பேருக்கு கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 12 Oct 2020 2:41 AM IST (Updated: 12 Oct 2020 2:41 AM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் புதிதாக 10 ஆயிரத்து 792 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

மும்பை,

மராட்டியத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இதில் நேற்று மாநிலத்தில் புதிதாக 10 ஆயிரத்து 792 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 15 லட்சத்து 28 ஆயிரத்து 226 ஆக உயர்ந்து உள்ளது.

இதில் 12 லட்சத்து 66 ஆயிரத்து 240 பேர் குணமாகி உள்ளனர். தற்போது மாநிலம் முழுவதும் 2 லட்சத்து 21 ஆயிரத்து 174 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

309 பேர் பலி

இதேபோல மாநிலம் முழுவதும் நேற்று புதிதாக 309 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியாகி உள்ளனர். இதன் மூலம் பலியானோர் எண்ணிக்கை 40 ஆயிரத்து 349 ஆக அதிகரித்து உள்ளது.

தற்போது மாநிலம் முழுவதும் 23 லட்சத்து 10 ஆயிரத்து 783 பேர் வீடுகளிலும், 24 ஆயிரத்து 726 பேர் தனிமை மையங்களிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதுவரை மராட்டியத்தில் 76 லட்சத்து 43 ஆயிரத்து 584 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது.

மும்பை

இதுபோல மும்பை நகரில் நேற்று புதிதாக 2 ஆயிரத்து 170 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டனர். இதுவரை 2 லட்சத்து 29 ஆயிரத்து 446 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 1 லட்சத்து 93 ஆயிரத்து 805 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போது 25 ஆயிரத்து 767 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மும்பையில் நேற்று மேலும் 42 பேர் ஆட்கொல்லி நோய்க்கு உயிரிழந்து உள்ளனர். இதுவரை நகரில் 9 ஆயிரத்து 433 பேர் பலியாகி உள்ளனர்.

Next Story