ஸ்டாலினை முதல்-அமைச்சராக்க பிரசாரத்தை தொடங்கி விட்டோம்: கே.என்.நேரு எம்.எல்.ஏ. பேட்டி


ஸ்டாலினை முதல்-அமைச்சராக்க பிரசாரத்தை தொடங்கி விட்டோம்: கே.என்.நேரு எம்.எல்.ஏ. பேட்டி
x
தினத்தந்தி 12 Oct 2020 5:00 AM IST (Updated: 12 Oct 2020 4:32 AM IST)
t-max-icont-min-icon

ஸ்டாலினை முதல்-அமைச்சராக்க பிரசாரத்தை தொடங்கி விட்டோம் என தி.மு.க. முதன்மை செயலாளர் கே.என்.நேரு எம்.எல்.ஏ. கூறினார்.

திருச்சி, 

திருச்சி மத்திய மற்றும் வடக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு தி.மு.க. முதன்மை செயலாளர் கே.என்.நேரு எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பிறகு கே.என்.நேரு நிருபர்களிடம் கூறியதாவது:-

தி.மு.க. முப்பெரும் விழாவை திருச்சியில் நடத்த தலைவர் மு.க.ஸ்டாலின் ஒப்புதல் அளித்துள்ளார். ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தில் 9 தொகுதிகளிலும் 1 லட்சம் பேர் கலந்து கொள்ளும் வகையில், பிரம்மாண்டமான ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. முப்பெரும் விழாவை நிர்வாகிகள் பார்வையிடும் வகையில் காணொலி திரை அமைக்கப்படுகிறது. மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் நிர்வாகிகளிடம் பேசுவார்.

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. அந்தவகையில் மு.க.ஸ்டாலினை முதல்- அமைச்சராக்க நாங்கள் பிரசாரத்தை தொடங்கி விட்டோம். அதற்கு முன்னோட்ட கூட்டமாக தான் இதனை பயன்படுத்த இருக்கிறோம். முப்பெரும் விழாவில் மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழிகள் வழங்கப்படும்.

கடலூரில் ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவரை தரையில் அமர வைத்ததை வன்மையாக கண்டிக்கிறோம். அந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் இதுபோன்ற சம்பவங்கள் இனி தொடராமல் இருக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story