பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் உதவித் தொகை பெற விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் ஜெயகாந்தன் தகவல்


பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் உதவித் தொகை பெற விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் ஜெயகாந்தன் தகவல்
x
தினத்தந்தி 12 Oct 2020 9:43 AM IST (Updated: 12 Oct 2020 9:43 AM IST)
t-max-icont-min-icon

பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் உதவித் தொகை பெற விரும்புபவர்கள் அரசு இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- சிவகங்கை மாவட்டத்தில் 2020-21-ம் ஆண்டில் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தில் பயன்பெற விரும்புபவர்கள் ஆண் வாரிசு இல்லை என்பதற்கான சான்றிதழ், குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 72 ஆயிரத்திற்குள் இருப்பதற்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

ஒரு பெண் குழந்தை அல்லது 2 பெண் குழந்தைகளுடன் தாய் அல்லது தந்தை 35 வயதிற்குள் குடும்பநல அறுவை சிகிச்சை செய்து கொண்டதற்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். குழந்தைகள் பிறந்த 3 ஆண்டுகளுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பத்துடன் குழந்தைகளின் பிறப்பு சான்றிதழ், பெற்றோர்களின் இருப்பிடச் சான்றிதழ், சாதி சான்றிதழ், தாய் மற்றும் தந்தையின் வயது சான்று, குடும்ப புகைப்படம் ஆகியவைகளை இணைத்து அருகில் உள்ள அரசு இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story