ரூ.3½ கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலகம் திறப்பது எப்போது? மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
சிவகாசி அருகே ரூ.3½ கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டு கடந்த 6 மாதங்களாக திறப்பு விழா காணாமல் இருக்கும் வட்டார போக்குவரத்து அலுவலகத்தை உடனே மக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவிட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
சிவகாசி,
சிவகாசி வட்டார போக்குவரத்து அலுவலகம் விருதுநகர் ரோட்டில் திருத்தங்கல் புது பஸ்நிலையம் அருகில் உள்ள ஒரு வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. போதிய இடவசதி இல்லாத இந்த அலுவலகத்தில் அதிகாரிகள் அமர்ந்து பணி செய்ய கூட இடம் இல்லாமல் அலுவலகத்தின் வெளியே தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள ஒரு இடத்தில் அமர்ந்து வேலை செய்து வருகிறார்கள்.
இந்த வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு பல்வேறு பணி காரணமாக ஆண்கள், பெண்கள் என குறைந்தது 200 பேர் வந்து செல்கிறார்கள். இவர்கள் அமர போதிய இடவசதி இல்லை. அதே போல் கழிப்பறை வசதியும் இல்லை.
சிவகாசி வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு வரும் நபர்கள் தாங்கள் கொண்டு வரும் வாகனங்களை அலுவலகத்தின் வெளியே நிறுத்தி விட்டு தான் அலுவலகத்துக்கு உள்ளே செல்ல முடியும். இதனால் சிவகாசி-விருதுநகர் ரோட்டில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.
புதிய வாகனங்களை அதிகாரிகளின் ஆய்வுக்கு கொண்டு வந்தால் அந்த வாகனத்தை திருத்தங்கல் புதிய பஸ்நிலையத்தில் நிறுத்தி ஆய்வு செய்ய வேண்டிய நிலை உள்ளது. இதை கருத்தில் கொண்டு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் சிவகாசியில் புதிய வட்டார போக்குவரத்து அலுவலகம் அமைக்க அரசு அனுமதி அளித்து அதற்கானநிதியை ஒதுக்கியது.
இதை தொடர்ந்து ஆனையூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் ரூ.3½ கோடி செலவில் புதிய வட்டார போக்குவரத்து அலுவலகம் அமைக்கப்பட்டது. நவீன வசதிகள்அனைத்தும் உள்ள இந்த வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் உள்ளது.
அதிகாரிகளுக்கு தேவையான இடவசதியும் உள்ளது. புதிதாக கட்டி முடிக்கப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலகத்தை அதிகாரிகள் பார்வையிட்டு சென்று 6 மாதங்கள் ஆகிறது. ஆனால் இந்த அலுவலகத்தை இன்னும் திறந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடவில்லை. சுமார் 2½ ஏக்கர் நிலப்பரப்பில் அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலகம் எப்போது திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு விடப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது. பல லட்சம் ரூபாய் செலவில் நவீன வசதிகளுடன் கட்டி முடிக்கப்பட்ட சிவகாசி வட்டார போக்குவரத்து அலுவலகத்தை திறக்க தேவையான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

Related Tags :
Next Story