பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை கண்டித்து மாநிலம் முழுவதும் பா.ஜனதா போராட்டம்


பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை கண்டித்து மாநிலம் முழுவதும் பா.ஜனதா போராட்டம்
x
தினத்தந்தி 12 Oct 2020 9:16 PM GMT (Updated: 12 Oct 2020 9:16 PM GMT)

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை கண்டித்து பா.ஜனதா மாநிலம் தழுவிய போராட்டத்தை நடத்தியது.

மும்பை,

மராட்டியத்தில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை கண்டித்து நேற்று மாநில பா.ஜனதா சார்பில் மாநிலம் தழுவிய போராட்டம் நடந்தது. புனேயில் நடந்த போராட்டத்தில் மாநில பா.ஜனதா தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் தலைமை தாங்கினார்.

மும்பையில் மேல்-சபை எதிர்க்கட்சி தலைவர் பிரவீன் தரேகர் தலைமையில் சவுபாத்தியில் இருந்து தாதர் சைத்ய பூமி வரை ஊர்வலம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டார்.

தானேயில் மூத்த தலைவர் ஆசிஸ் செலார் தலைமையில் போராட்டம் நடந்தது.

மனு கொடுத்தனர்

இதேபோல பர்பானி, ஜல்னா, சோலாப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் போராட்டம் நடந்தது. போராட்டத்தின் போது பெண்களுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்தும், அதனை தடுக்க தவறிய மாநில அரசை கண்டித்தும் போராட்டக்காரர்கள் ஆக்ரோசமாக கோஷம் எழுப்பினர்.

இந்த போராட்டத்தை தொடர்ந்து அந்தந்த மாவட்டங்களில் கலெக்டர்களிடம் பா.ஜனதாவினர் மனு கொடுத்தனர்.

Next Story