பக்கத்து வீட்டு பெண் மீது நடிகை ரியா சி.பி.ஐ.யில் புகார்


பக்கத்து வீட்டு பெண் மீது நடிகை ரியா சி.பி.ஐ.யில் புகார்
x
தினத்தந்தி 13 Oct 2020 2:59 AM IST (Updated: 13 Oct 2020 2:59 AM IST)
t-max-icont-min-icon

பக்கத்துவீட்டு பெண் மீது நடிகை ரியா சி.பி.ஐ.யில் புகார் அளித்து உள்ளார்.

மும்பை,

நடிகா் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் 14-ந் தேதி பாந்திராவில் உள்ள அவரது வீட்டில் பிணமாக மீட்கப்பட்டார். நடிகரை தற்கொலைக்கு தூண்டியதாக சி.பி.ஐ. அவரது காதலி ரியா சக்கரவர்த்தி மற்றும் குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் ரியா அவரது பக்கத்து வீட்டு பெண் டிம்பிள் தவானி மீது சி.பி.ஐ.யில் புகார் ஒன்றை அளித்து உள்ளார்.

பொய் குற்றச்சாட்டு

அந்த புகாரில் கூறப்பட்டு இருப்பதாவது:-

டிம்பிள் தவானி தெரிந்தே தவறான மற்றும் போலியான குற்றச்சாட்டுகளை கூறி விசாரணையை திசை திருப்பி உள்ளாா். ஜூன் 13-ந் தேதி சுஷாந்த் சிங் என்னை எனது வீட்டில் காரில் இறக்கிவிட்டார் என அவர் கூறியது பொய்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ரியா அவரது வக்கீல் மூலமாக சி.பி.ஐ. சிறப்பு பிரிவு தலைவர் நுபுர் சர்மாவுக்கு இந்த புகாரை அளித்து உள்ளார்.

Next Story