ராதாபுரம் அருகே பெண் வெட்டிக்கொலை: 2 வாலிபர்களுக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு
ராதாபுரம் அருகே பெண் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 வாலிபர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து நெல்லை கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
நெல்லை,
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே குட்டிநாயக்கர்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ். இவருடைய மகன் சங்கர் என்ற சங்கர் கணேஷ் (வயது 25), பொக்லைன் ஆபரேட்டர். அதே பகுதியைச் சேர்ந்தவர் முருகன் மகன் இசக்கி (வயது 29), கார் டிரைவர். இவர்கள் 2 பேரும் உறவினர்கள்.
அதே பகுதியில் வசிப்பவர் மற்றொரு முருகன். இவருடைய மனைவி இந்திரா (45). இவர்களுடைய மகளிடம், ராஜ் அடிக்கடி பேசி வந்தார். இதனை இந்திரா கண்டித்து, ராஜை அவதூறாக பேசினார். இதனால் மனமுடைந்த ராஜ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பெண் வெட்டிக்கொலை
இதற்கிடையே, தன்னுடைய தந்தை ராஜ் தற்கொலை செய்ததற்கு இந்தராதான் காரணம் என்று கருதிய சங்கர் கணேஷ், அவரை பழி தீர்க்க திட்டமிட்டார். இந்த நிலையில் கடந்த 2-1-2015 அன்று ராதாபுரம் அருகே முடவன்குளம் நெடுவாளி வடக்கு தெரு பகுதியில் இந்திரா நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த சங்கர் கணேஷ், உறவினர் இசக்கி ஆகிய 2 பேரும் சேர்ந்து அரிவாளால் இந்திராவை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர். இதுகுறித்து ராதாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கர் கணேஷ், இசக்கி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
2 பேருக்கு ஆயுள் தண்டனை
இந்த வழக்கு விசாரணை நெல்லை மாவட்ட 4-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி விஜயகாந்த், இந்திராவை கொலை செய்த சங்கர் கணேஷ், இசக்கி ஆகிய 2 பேருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் துரை முத்துராஜ் ஆஜரானார்.

Related Tags :
Next Story