நெல்லையில் அரசு ஊழியர்கள் உள்பட 62 பேருக்கு கொரோனா தென்காசி, தூத்துக்குடியில் 76 பேருக்கு தொற்று


நெல்லையில் அரசு ஊழியர்கள் உள்பட 62 பேருக்கு கொரோனா தென்காசி, தூத்துக்குடியில் 76 பேருக்கு தொற்று
x
தினத்தந்தி 13 Oct 2020 4:30 AM IST (Updated: 13 Oct 2020 4:30 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் அரசு ஊழியர்கள் உள்பட 62 பேருக்கு நேற்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. தென்காசி, தூத்துக்குடியில் 76 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது.

நெல்லை,

நெல்லை மாவட்டத்தில் நேற்று அரசு ஊழியர்கள் 2 பேர் உள்பட 62 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் நெல்லை மாநகர பகுதியில் 20 பேர், நாங்குநேரி பகுதியில் 2 பேர், அம்பை பகுதியில் 4 பேர், மானூர் பகுதியில் 4 பேர், பாளையங்கோட்டை புறநகர் பகுதியில் 13 பேர், ராதாபுரத்தில் 7பேர், வள்ளியூரில் 3 பேர், களக்காட்டில் 9 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் அனைவரும் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இவர்களுடன் சேர்த்து நெல்லை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 13 ஆயிரத்து 573 ஆக அதிகரித்து உள்ளது. இதில் 12 ஆயிரத்து 690 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதில் நேற்று ஒரே நாளில் 73 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்கள். 679 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். நேற்று கொரோனாவுக்கு 2 முதியவர்கள் பலியாகி உள்ளனர். இதுவரை 204 பேர் இறந்துள்ளனர்.

தென்காசி-தூத்துக்குடி

தென்காசி மாவட்டத்தில் புதிதாக 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 6 ஆயிரத்து 915 ஆக அதிகரித்து உள்ளது. இதில் 6 ஆயிரத்து 150 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 636 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 129 பேர் இறந்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் 59 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 14 ஆயிரத்து 181 ஆக உயர்ந்து உள்ளது. இதில் 13 ஆயிரத்து 518 பேர் முழுமையாக குணமடைந்து உள்ளனர். மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் வீடுகளில் 539 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனாவால் இதுவரை 124 பேர் இறந்து உள்ளனர்.

Next Story