மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலக வாசலில் மன்னம்பந்தல் ஊராட்சி தலைவர் ‘திடீர்’ தர்ணா போராட்டம்
மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலக வாசலில் அமர்ந்து மன்னம்பந்தல் ஊராட்சி தலைவர் ‘திடீர்’ தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
மயிலாடுதுறை,
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள மன்னம்பந்தல் ஊராட்சி தலைவராக இருப்பவர் பிரியா. தி.மு.க.வை சேர்ந்த இவர், ஆதி திராவிடர் சமூகத்தை சேர்ந்தவர். மன்னம்பந்தல் ஊராட்சி ஆதி திராவிடர்களுக்கு ஒதுக்கப்பட்ட தனி ஊராட்சி ஆகும்.
இந்த நிலையில் நேற்று மாலை 5.30 மணி அளவில் ஊராட்சி தலைவர் பிரியா, மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலக வாசலில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
சாதி பெயரை சொல்லி திட்டினார்
கடந்த 5-ந் தேதி ஊராட்சி மன்ற அலுவலகத்தில், எனது தலைமையில் ஊராட்சி மன்ற கூட்டம் நடந்தது. அப்போது அங்கு வந்த துணை தலைவர் அமலா மற்றும் அவரது கணவர் ராஜகோபால் ஆகியோர், சுழல் நாற்காலியில் அமர்ந்து கொண்டு எப்படி கூட்டம் நடத்தலாம்? ஊராட்சி நிதியில் யாரை கேட்டு சுழல் நாற்காலி வாங்கினீர்கள்?. சாதாரண நாற்காலியில் உட்கார்ந்து தான் கூட்டம் நடத்த வேண்டும் என்று கூறியதோடு என்னை திட்டி அவமானப்படுத்தினர்.
இதேபோல 1-வது வார்டு உறுப்பினர் மைதிலியின் கணவர் முருகானந்தம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நுழைந்து என்னை சாதிப்பெயரை சொல்லி திட்டினார். துணைத்தலைவர் மற்றும் உறுப்பினர் மைதிலியின் கணவர் முருகானந்தம் ஆகியோர் தொடர்ந்து என்னை அவமானப்படுத்தி வருகின்றனர்.
இதற்கு ஊராட்சி செயலாளர் வெங்கடேஸ்வரன் துணையாக உள்ளார். ஊராட்சியில் நடக்கும் வளர்ச்சி பணிகளுக்கு ஒத்துழைப்பு அளிக்காமல் துணைத்தலைவர் கையெழுத்திடாமல் தவிர்த்து வருகிறார். எனவே இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேச்சுவார்த்தை
இதனையடுத்து வட்டார வளர்ச்சி அலுவலர்(ஊராட்சிகள்) சரவணன் மற்றும் அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட ஊராட்சி தலைவர் பிரியாவிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் ஊராட்சி செயலாளரை உடனடியாக இடமாற்றம் செய்வது, சாதி ரீதியாக திட்டி அவமானப்படுத்தியது தொடர்பாக போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து நடவடிக்கை எடுப்பது என்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து ஊராட்சி தலைவர் பிரியா தனது போராட்டத்தை கைவிட்டார்.
ஊராட்சி தலைவர் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவத்தால் மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story