திருவையாறு அருகே வீடு புகுந்து பணம் திருடிய வாலிபர் கைது பொதுமக்கள் விரட்டி பிடித்தனர்
திருவையாறு அருகே வீடு புகுந்து பணம் திருடிய வாலிபரை பொதுமக்கள் விரட்டி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருவையாறு,
தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே உள்ள வீரசிங்கம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் வேலாயுதம். இவருடைய மகள் மகாலட்சுமி. நேற்று காலை 11 மணி அளவில் இவரது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர் வீட்டில் இருந்த ரூ.2500-ஐ திருடினார். பின்னர் அவர் அதே பகுதியை சேர்ந்த பரமேஸ்வரி என்பவரது வீட்டில் புகுந்து பீரோவை திறக்க முயன்றார். அப்போது சத்தம் கேட்டு அங்கு வந்த பரமேஸ்வரி தனது வீட்டில் மர்ம நபர் ஒருவர் நிற்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார். இதனால் அந்த நபர் வீட்டில் இருந்து வெளியே ஓடி வந்து தெருவில் இறங்கி ஓட்டம் பிடித்தார்.
கைது
இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் அந்த மர்ம நபரை விரட்டி பிடித்து திருவையாறு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர், மேலத்திருப்பூந்துருத்தி ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்த சின்ராசு மகன் சதீஷ்குமார்(வயது34) என்றும், அவர் வீடு புகுந்து பணத்தை திருடியதும் தெரியவந்தது. மேலும் அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் திருவையாறு அருகே உள்ள பொன்னாவரை பகுதியில் சுவாதி என்பவர் வீட்டில் புகுந்து செல்போனை திருடி சென்றதையும் ஒப்புக்கொண்டார். இதைத்தொடர்ந்து போலீசார் சதீஷ்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
Next Story