மாவட்ட செய்திகள்

ராணிப்பேட்டை மாவட்டத்தில், 21 பேருக்கு கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 14 ஆயிரத்தை கடந்தது + "||" + In Ranipettai district, Corona for 21 people - The number of victims exceeded 14 thousand

ராணிப்பேட்டை மாவட்டத்தில், 21 பேருக்கு கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 14 ஆயிரத்தை கடந்தது

ராணிப்பேட்டை மாவட்டத்தில், 21 பேருக்கு கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 14 ஆயிரத்தை கடந்தது
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 21 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.இதனால் பாதிப்பு எண்ணிக்கை 14 ஆயிரத்தை கடந்தது.
ராணிப்பேட்டை, 

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் ராணிப்பேட்டை, ஆற்காடு, வாலாஜா, சோளிங்கர், அரக்கோணம், நெமிலி, காவேரிபாக்கம், திமிரி பகுதிகளைச் சேர்ந்த 21 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 80 ஆக உயர்ந்துள்ளது. 361 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ராணிப்பேட்டையில் மட்டும் பழைய பஸ்நிலையம் அருகில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த 59 வயது ஆண், காரை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த 37 வயது பெண், வள்ளலார் நகரை சார்ந்த 47 வயது பெண், செட்டித்தாங்கல் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த 55 வயது பெண், புளியந்தாங்கலை சேர்ந்த 32 வயது பெண், பெல் டவுன்ஷிப் பகுதியை சேர்ந்த 43 வயது பெண் என 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. 21 பேருக்கு கொரோனா உறுதி
21 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
2. புதுக்கோட்டை மாவட்டத்தில் 21 பேருக்கு கொரோனா
மாவட்டத்தில் 21 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
3. தென்காசியில் 21 பேருக்கு கொரோனா
தென்காசி மாவட்டத்தில் 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
4. தென்காசி மாவட்டத்தில் 21 பேருக்கு கொரோனா
தென்காசி மாவட்டத்தில் 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
5. 21 பேருக்கு கொரோனா
மேலும் 21 பேருக்கு கொரோனா