மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் நாளை முதல் கூடுதலாக 194 ரெயில் சேவைகள்


மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் நாளை முதல் கூடுதலாக 194 ரெயில் சேவைகள்
x
தினத்தந்தி 14 Oct 2020 2:56 AM IST (Updated: 14 Oct 2020 2:56 AM IST)
t-max-icont-min-icon

மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் ஏ.சி. ரெயில்கள் உள்பட கூடுதலாக 194 ரெயில் சேவைகள் நாளை முதல் இயக்கப்பட உள்ளது.

மும்பை,

கொரோனா தொற்று பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மின்சார ரெயில் சேவை கடந்த ஜூன் மாதம் 15-ந்தேதி முதல் அத்தியாவசிய பணி ஊழியர்களுக்காக இயக்கப்பட்டு வருகிறது. படிப்படியாக மத்திய மற்றும் மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் மின்சார ரெயில் சேவைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வருகிறது.

மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் தற்போது 506 ரெயில் சேவைகள் இயக்கப்படுகிறது.

கூடுதலாக 194 ரெயில் சேவைகள்

இந்தநிலையில் மேற்கு ரெயில்வே நேற்று விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

அத்தியாவசிய பணிக்கு செல்லும் பயணிகள் சமூக இடைவெளியை பின்பற்றுவதற்கும், கூட்ட நெரிசலை தவிர்க்கவும் கூடுதலாக 194 ரெயில் சேவைகள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கூடுதல் ரெயில் சேவை நாளை (வியாழக்கிழமை) முதல் தொடங்கப்பட உள்ளது. இதில் 10 ஏ.சி. மின்சார ரெயில்களும் அடங்கும். இதனால் மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் இயக்கப்படும் மொத்த ரெயில் சேவை 700-ஆக அதிகரிக்கப்பட உள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story