பணிநிரந்தரம் செய்யக்கோரி ஆதிதிராவிட நலத்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


பணிநிரந்தரம் செய்யக்கோரி ஆதிதிராவிட நலத்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 13 Oct 2020 10:39 PM GMT (Updated: 13 Oct 2020 10:39 PM GMT)

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஊழியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மாலை தட்டாஞ்சாவடியில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி,

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஊழியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மாலை தட்டாஞ்சாவடியில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க தலைவர் அருள்தாஸ் தலைமை தாங்கினார். சங்கத்தின் பொதுச்செயலாளர் சொக்கலிங்கம், செயல்தலைவர் திருநாவுக்கரசு, துணைத் தலைவர்கள் ஏழுமலை, துளசிங்கம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஆதிதிராவிடர் நலத்துறையில் பணி செய்து வரும் தினக்கூலி ஊழியர்கள் 118 பேரை எந்த நிபந்தனையுமின்றி பணிநிரந்தரம் செய்ய வேண்டும். பணி இடமாற்ற கொள்கையை உருவாக்க வேண்டும். 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளுக்கான நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Next Story