சேலத்தில் உடல் நலக்குறைவால் மரணம்: முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் உடல் தகனம் அமைச்சர்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள் அஞ்சலி
உடல் நலக்குறைவால் மரணம் அடைந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் உடல் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக அவரது உடலுக்கு அமைச்சர்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
சேலம்,
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் கே.தவுசாயம்மாள் (வயது 93). வயது முதிர்வு காரணமாக எடப்பாடி அருகே உள்ள தனது சொந்த ஊரான சிலுவம்பாளையத்தில் உள்ள வீட்டில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு முதுகு தண்டுவடம் பாதிப்பால் உடல் நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து சேலம் 4 ரோடு அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு 12.15 மணியளவில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி தவுசாயம்மாள் மரணம் அடைந்தார். இதையடுத்து அவரது உடல் சேலம் மாவட்டம் எடப்பாடி அருகிலுள்ள சிலுவம்பாளையம் கிராமத்தில் முதல்-அமைச்சரின் வீட்டிற்கு எடுத்து சென்று அங்கு பொதுமக்களின் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது.
இதனிடையே, தாயாரின் மறைவு குறித்து தகவல் அறிந்தவுடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து கார் மூலம் உடனடியாக சேலத்திற்கு புறப்பட்டார். பின்னர் அவர் நேற்று அதிகாலை சிலுவம்பாளையத்திற்கு வந்தார். இதையடுத்து வீட்டில் வைக்கப்பட்டிருந்த தனது தாயாரின் உடலை பார்த்து கண்ணீர் விட்டு அழுத அவர், மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அப்போது, முதல்-அமைச்சருக்கு அவரது குடும்பத்தினரும், கட்சியினரும் ஆறுதல் கூறினர்.
இதைத்தொடர்ந்து அமைச்சர்கள் செங்கோட்டையன், கே.பி.அன்பழகன், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, சரோஜா, கருப்பணன், எம்.ஆர்.விஜயபாஸ்கர், உடுமலை ராதாகிருஷ்ணன், ராஜேந்திரபாலாஜி மற்றும் கே.பி.முனுசாமி எம்.பி., கூட்டுறவு வங்கி மாநில தலைவர் இளங்கோவன், சேலம் மாவட்ட கலெக்டர் ராமன், ஈரோடு மாவட்ட கலெக்டர் கதிரவன், கூடுதல் ஏ.டி.ஜி.பி. ராஜேஸ்தாஸ், கோவை ஐ.ஜி.பெரியய்யா மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள், பொதுமக்கள் பலரும் நேரில் வந்து முதல்-அமைச்சரின் தாயாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இதையடுத்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கொரோனா பரவல் காரணமாக யார்? யார்? எப்படி வருவார்கள் என்று தெரியாது. எனவே, இறுதிச்சடங்கு உடனடியாக நடத்தப்படுகிறது எனக்கூறி கண் கலங்கினார். பின்னர் காலை 8.30 மணியளவில் முதல்-அமைச்சரின் தாயார் தவுசாயம்மாளின் உடலை தகனம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
பின்னர் தவுசாயம்மாளின் உடலுக்கு இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டன. அதன்பிறகு வீட்டில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் காவிரி கரையோரம் உள்ள மயானத்திற்கு அவரது உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.
இறுதி ஊர்வலத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடந்து சென்றார். அவருடன் அமைச்சர்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள், அரசுத்துறை அதிகாரிகள் பலரும் சென்றனர். பின்னர் அங்கு இறுதிச்சடங்கு செய்து சரியாக 9.30 மணியளவில் தவுசாயம்மாளின் உடல் தகனம் செய்யப்பட்டது. அதாவது, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அண்ணன் கோவிந்தராஜ் இறுதிச்சடங்குகளை செய்து தவுசாயம்மாளின் உடலுக்கு தீ மூட்டினார்.
முன்னதாக முதல்-அமைச்சரின் வீட்டில் வைக்கப்பட்டிருந்த தவுசாயம்மாளின் உடலுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபாகனிக்கர், எம்.எல்.ஏ.க்கள் ஜி.வெங்கடாஜலம், செம்மலை, மனோன்மணி, வெற்றிவேல், சக்திவேல், ராஜா, சித்ரா, சின்னதம்பி, மருதமுத்து மற்றும் முன்னாள் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், கூட்டுறவு வங்கி தலைவர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.
இதனிடையே, காலை 10 மணிக்கு பிறகு சபாநாயகர் தனபால், தலைமை செயலாளர் சண்முகம், தம்பிதுரை எம்.பி., அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், உதயகுமார், ஜெயக்குமார், விஜயபாஸ்கர், சி.வி.சண்முகம், வெல்லமண்டி நடராஜன், ராஜலட்சுமி, பெஞ்சமின், பாஸ்கரன், நிலோபர் கபில், சேவூர் ராமச்சந்திரன், சம்பத், கே.சி.வீரமணி, முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் பா.வளர்மதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆறுதல் கூறினர்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைவையொட்டி சிலுவம்பாளையம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

Related Tags :
Next Story