திருப்பத்தூரில், இந்திய கம்யூனிஸ்டு கட்சி சாலை மறியல்


திருப்பத்தூரில், இந்திய கம்யூனிஸ்டு கட்சி சாலை மறியல்
x
தினத்தந்தி 14 Oct 2020 5:30 PM IST (Updated: 14 Oct 2020 5:18 PM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூரில் மத்திய, மாநில அரசின் மக்கள் விரோத சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.

திருப்பத்தூர், 

திருப்பத்தூர் மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மத்திய, மாநில அரசின் மக்கள் விரோத சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் திருப்பத்தூர் தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்றது. நகர செயலாளர் எம்.சுந்தரேசன், தலைமை தாங்கினார். நகர குழு துணைச் செயலாளர் பைரோஸ், முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை மாவட்ட செயலாளர் ஏ.சி.சாமிகண்ணு, தொடங்கி வைத்து பேசினார்.

பின்னர் வாணியம்பாடி மெயின் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது மத்திய அரசு கொண்டு வந்துள்ள விவசாய சட்டத்தை ரத்து செய்யக்கோரியும், மின்சாரத்தை தனியார் மயமாக்குவதை கண்டித்தும், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் இனிவரும் காலங்களில் கிடைக்காத நிலை உருவாக்கும் மத்திய அரசின் சட்டத்தை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர். இதில் அன்வர்பாஷா, குமார், ராமு உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மறியலில் ஈடுபட்டவர்களை டவுன் போலீசார் கைது செய்தனர்.

இதேபோல் கந்திலி பஸ்நிலையத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட துணை செயலாளர் நந்தி, தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஒன்றியச் செயலாளர் அண்ணாமலை உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Next Story