ஆன்லைன் மூலம் சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்


ஆன்லைன் மூலம் சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 14 Oct 2020 11:06 PM IST (Updated: 14 Oct 2020 11:06 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆன்லைன் மூலம் சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம், என்று மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் 2020-21-ம் ஆண்டுக்கான சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகை பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இஸ்லாமியர், கிறிஸ்தவர், சீக்கியம், புத்த மதத்தினர், பார்சி மற்றும் ஜெயின் மதத்தை சேர்ந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும், மத்திய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிறுவனங்களில் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை படித்து வரும் மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகையும், 11-ம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை படிப்பவர்களுக்கு மேற்படிப்பு கல்வி உதவித்தொகையும், தொழிற்கல்வி, தொழில்நுட்ப கல்வி படிப்பவர்களுக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையில் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகை பெற தகுதியுள்ள மாணவ-மாணவிகள் வருகிற 31-ந் தேதிக்குள் www.scholarships.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

இந்த கல்வி உதவித்தொகை மாணவ-மாணவிகள் வங்கி கணக்கில் மத்திய அரசால் நேரடியாக செலுத்தப்படும்.

கல்வி நிலையங்கள்

மேலும் மத்திய அரசின் தேசிய கல்வி உதவித்தொகை இணையத்தில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டு உள்ள கல்வி நிலையங்கள் தங்கள் கல்வி நிலையத்தக்கான ஒருங்கிணைப்பு அலுவலரின் விவரங்களை ஆன்லைன் மூலம் பூர்த்தி செய்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரிடம் இருநகல்கள் சமர்ப்பித்து ஒப்புதல் பெற்ற பிறகே, இணையதளத்தில் விண்ணப்பங்களை சரிபாக்க முடியும். புதிதாக விண்ணப்பிக்கும் மாணவ-மாணவிகள் இணைதளத்தில் எளிதாக விண்ணப்பிக்கும் வகையில் அனைத்து கல்வி நிலையங்களும் தங்களுடைய குறியீட்டு எண்ணை மாணவ-மாணவிகளுக்கு தெரிவிக்க வேண்டும்.

இந்த திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அமைந்து உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

Next Story