மாவட்ட செய்திகள்

குறைந்த விலைக்கு அமெரிக்க டாலர் தருவதாக டிரைவரிடம் ரூ.2 லட்சம் மோசடி 3 பேருக்கு வலைவீச்சு + "||" + Rs 2 lakh scam against driver for giving US dollars at low price

குறைந்த விலைக்கு அமெரிக்க டாலர் தருவதாக டிரைவரிடம் ரூ.2 லட்சம் மோசடி 3 பேருக்கு வலைவீச்சு

குறைந்த விலைக்கு அமெரிக்க டாலர் தருவதாக டிரைவரிடம் ரூ.2 லட்சம் மோசடி 3 பேருக்கு வலைவீச்சு
குறைந்த விலைக்கு அமெரிக்க டாலர் தருவதாக கூறி டிரைவரிடம் ரூ.2 லட்சம் மோசடி செய்த 3 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.
மும்பை,

நவிமும்பை வாஷியை சேர்ந்தவர் ஸ்ரீநாத்(வயது41). டிரைவராக இருந்து வருகிறார். இவருக்கு அண்மையில் கல்யாண் பாட்டாவை சேர்ந்த ராஜூ என்பவரின் அறிமுகம் கிடைத்தது. இருவரும் நண்பர்களாக பழகி வந்தனர். இந்தநிலையில் ராஜூ தனது பாட்டி அண்மையில் உயிரிழந்து விட்டதாகவும், அவர் ஏராளமான அமெரிக்க டாலர்கள் வைத்திருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் அதை குறைந்த விலைக்கு விற்க இருப்பதாக ஸ்ரீநாத்திடம் கூறினார்.


இதனை நம்பிய அவர் அமெரிக்க டாலர்களை வாங்க விருப்பம் தெரிவித்தார். இதற்காக ரூ.2 லட்சம் தருவதாக கூறினார். இதனை தொடர்ந்து ராஜூ தனது நண்பர்கள் 2 பேருடன் சென்று ஸ்ரீநாத்தை சந்தித்து ரூ.2 லட்சம் பெற்றார்.

வெற்று காகிதம்

பின்னர் அவர்கள் வைத்திருந்த அமெரிக்க டாலர்கள் அடங்கிய பண்டல்களை கொடுத்து விட்டு வீட்டில் போய் சரிபார்த்து கொள்ளவும் என கூறிவிட்டு அங்கிருந்து சென்று விட்டனர்.

வீட்டிற்கு வந்த டிரைவர் ஸ்ரீநாத் பண்டல்களை பிரித்து பார்த்தார். அப்போது அதில் மேலே ஒரே ஒரு நோட்டு மட்டும் அமெரிக்க டாலராகவும் மற்ற அனைத்தும் வெற்று காகிதமாகவும் இருப்பது தெரியவந்தது. இதனால் ஏமாற்றம் அடைந்த அவர் சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, 3 பேரையும் வலைவீசி தேடிவருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஈரோட்டில் போலி பணிநியமன ஆணை வழங்கி பல லட்சம் ரூபாய் மோசடி
ஈரோட்டில் போலி பணிநியமன ஆணை வழங்கி பல லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு கொடுத்தனர்.
2. திருச்செங்கோட்டில் துணிகரம்: பழக்கடையின் பூட்டை உடைத்து ரூ.3½ லட்சம் திருட்டு
திருச்செங்கோட்டில் துணிகரம்: பழக்கடையின் பூட்டை உடைத்து ரூ.3½ லட்சம் திருட்டு மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு.
3. ஏற்காடு ஒன்றியத்தில் தனிநபர் கழிப்பிடம் கட்டும் திட்டத்தில் ரூ.2½ லட்சம் மோசடி
ஏற்காடு ஒன்றியத்தில் தனிநபர் கழிப்பிடம் கட்டும் திட்டத்தில் ரூ.2 லட்சத்து 58 ஆயிரம் மோசடி செய்தது தொடர்பாக பெண் வட்டார வளர்ச்சி அலுவலர் உள்பட 5 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
4. வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக தச்சு தொழிலாளியிடம் ரூ.1¼ லட்சம் மோசடி தாய்-மகன் உள்பட 3 பேர் மீது வழக்கு
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி, தச்சு தொழிலாளியிடம் ரூ.1¼ லட்சம் மோசடி செய்ததாக தாய்-மகன் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
5. தனியார் நிதி நிறுவனம் நடத்தி ரூ.20 லட்சம் மோசடி செய்த மேலும் ஒருவர் கைது
நிதி நிறுவனம் நடத்தி ரூ.20 லட்சம் மோசடி செய்த மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.