புதிதாக 9,265 பேருக்கு தொற்று- 75 பேர் சாவு பெங்களூருவில் கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை நெருங்குகிறது


புதிதாக 9,265 பேருக்கு தொற்று- 75 பேர் சாவு பெங்களூருவில் கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை நெருங்குகிறது
x
தினத்தந்தி 15 Oct 2020 3:32 AM IST (Updated: 15 Oct 2020 3:32 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் புதிதாக 9,265 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில், மேலும் 75 பேர் இறந்து உள்ளனர். பெங்களூருவில் கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை நெருங்கி உள்ளது.

பெங்களூரு,

கர்நாடகத்தில் நேற்று முன்தினம் வரை 7 லட்சத்து 26 ஆயிரத்து 106 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருந்தது. நேற்று புதிதாக 9,265 பேருக்கு பாதிப்பு உறுதியானது. இதன்மூலம் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 7 லட்சத்து 25 ஆயிரத்து 371 ஆக உயர்ந்து உள்ளது. நேற்று முன்தினம் வரை 10 ஆயிரத்து 123 பேர் கொரோனாவுக்கு இறந்தனர். நேற்று 75 பேர் இறந்தனர். இதன் மூலம் உயிரிழப்பு 10 ஆயிரத்து 198 ஆக உயர்ந்து உள்ளது.

புதிதாக பாகல்கோட்டையில் 158 பேர், பல்லாரியில் 275 பேர், பெலகாவியில் 297 பேர், பெங்களூரு புறநகரில் 344 பேர், பெங்களூரு நகரில் 4,574 பேர், பீதரில் 19 பேர், சாம்ராஜ்நகரில் 97 பேர், சிக்பள்ளாப்பூரில் 137 பேர், சிக்கமகளூருவில் 97 பேர், சித்ரதுர்காவில் 162 பேர், தட்சிண கன்னடாவில் 292 பேர், தாவணகெரேயில் 82 பேர், தார்வாரில் 136 பேர், கதக்கில் 41 பேர், ஹாசனில் 227 பேர், ஹாவேரியில் 66 பேர், கலபுரகியில் 39 பேர், குடகில் 160 பேர், கோலாரில் 93 பேர், கொப்பலில் 60 பேர், மண்டியாவில் 212 பேர், மைசூருவில் 641 பேர், ராய்ச்சூரில் 44 பேர், ராமநகரில் 42 பேர், சிவமொக்காவில் 83 பேர், துமகூருவில் 341 பேர், உடுப்பியில் 199 பேர், உத்தர கன்னடாவில் 192 பேர், விஜயாப்புராவில் 128 பேர், யாதகிரியில் 27 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

3 லட்சத்தை நெருங்குகிறது

கொரோனாவுக்கு பெங்களூரு நகரில் 27 பேர், மைசூருவில் 11 பேர், தட்சிண கன்னடாவில் 5 பேர் உள்பட 75 பேர் உயிரிழந்து உள்ளனர். நேற்று 8 ஆயிரத்து 662 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால் குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 6 லட்சத்து 11 ஆயிரத்து 167 ஆக உயர்ந்து உள்ளது. 1 லட்சத்து 13 ஆயிரத்து 987 பேர் சிகிச்சையில் உள்ளனர். 925 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். நேற்று 1 லட்சத்து 13 ஆயிரத்து 771 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதுவரை 62 லட்சத்து 50 ஆயிரத்து 992 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளன.

இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

பெங்களூருவில் இதுவரை கொரோனாவுக்கு 2 லட்சத்து 93 ஆயிரத்து 405 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதன்மூலம் பெங்களூருவில் மட்டும் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story