பெண் கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம்: ‘ஆசைக்கு இணங்க மறுத்ததால் கற்பழித்து கொன்றேன்’ கைதான உறவினர் வாக்குமூலம்
பெரியபாளையம் அருகே பெண் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் உறவினர் கைது செய்யப்பட்டார். ஆசைக்கு இணங்க மறுத்ததால் கற்பழித்து கொன்றதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
பெரியபாளையம்,
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் அருகே அக்கரப்பாக்கம் ஊராட்சியை சேர்ந்த திருமணமான பெண் ஒருவர் கவுரி கன்னிகைபேர் அரசுப்பள்ளிக்கு பின்புறம் கொட்டகை அமைத்து பன்றிகளை வளர்த்து வந்தார். இதற்கிடையே கடந்த 11-ந்தேதி மாலை வழக்கம் போல் கொட்டகைக்கு பன்றி மேய்க்க சென்றவர், வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த அவரது கணவர் உள்ளிட்ட உறவினர்கள், மறுநாள் காலை அங்கு சென்று பார்த்தனர். அப்போது அவர் ஆடையில்லாமல் நிர்வாணமாக கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
அதைத்தொடர்ந்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற செங்கை சரக டி.ஐ.ஜி சாமுண்டீஸ்வரி தலைமையிலான போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து அவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை செய்தனர்.
இந்த நிலையில், போலீசாரின் சந்தேகப்பார்வை அவரது உறவினரான குமார் (30) மீது விழுந்தது. இதனால் அவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். கொலை செய்ததை ஒப்புக்கொண்ட அவர் அளித்த வாக்குமூலம் திடுக்கிட வைத்தது.
கொலையாளி வாக்குமூலம்
அதில் அவர் கூறும்போது, ‘கொலை செய்யப்பட்ட பெண்ணின் அண்ணன் மகனான எனக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். உறவினர்களான நாங்கள் இருவரும் அப்பகுதியில் பன்றி மேய்த்து வந்த நிலையில், என்னிடம் சகஜமாக பழகிவந்தார். இந்த சூழ்நிலையில், அவரை எப்படியாவது அடைய வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் ஏற்பட்டது.
இதற்கிடையே கடந்த 10-ந்தேதி மாலை கொட்டகைக்கு வந்து தனிமையில் உறவினரான அந்த பெண் பன்றி மேய்த்துக்கொண்டிருந்தார். அப்போது நான் யாருமே இல்லாத இந்த சூழ்நிலையை பயன்படுத்தி அவரை உல்லாசத்துக்கு அழைத்தேன். ஆனால் அவர் என் ஆசைக்கு இணங்காமல் ஆத்திரமடைந்து என்னை தாக்கினார். ஆனாலும் எனக்கு காம வெறி தலைக்கு ஏறியதால் அவரை பலவந்தமாக கற்பழித்தேன்.
கைது
அதன்பின்னர், அந்த பெண் நடந்ததை வெளியே சொல்லி விடுவாரோ என்ற பயத்தில், அவர் கட்டியிருந்த புடவையால் அவர் கழுத்தை இறுக்கிக் கொலை செய்துவிட்டு, அவர் அணிந்திருந்த 4 பவுன் தாலி சங்கிலி உள்ளிட்ட நகைகளை பறித்து கொண்டு உடலை முட்புதரில் தூக்கி வீசிவிட்டு தப்பி சென்றேன்’ என்று தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, பெரியபாளையம் போலீசார் குமாரை கைது செய்து, அவரிடமிருந்த நகைகளை பறிமுதல் செய்தனர். பின்னர், குற்றவாளி குமாரை ஊத்துக்கோட்டை முதல் நிலை குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ஆசைக்கு இணங்க மறுத்த அத்தையை கற்பழித்து கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Tags :
Next Story