டிராக்டர்- மோட்டார் சைக்கிள் மோதி விபத்து; வாலிபர் பலி


டிராக்டர்- மோட்டார் சைக்கிள் மோதி விபத்து; வாலிபர் பலி
x
தினத்தந்தி 15 Oct 2020 4:46 AM IST (Updated: 15 Oct 2020 4:46 AM IST)
t-max-icont-min-icon

அச்சரப்பாக்கம் அருகே டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் வாலிபர் பலியானார். உடன் சென்ற தாய் படுகாயமடைந்தார்.

அச்சரப்பாக்கம்,

செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் ஊராட்சி ஒன்றியம், பெரிய கயப்பாக்கத்தை சேர்ந்தவர் உதயகுமார். இவரது மனைவி மல்லிகா. இவர்களுக்கு 2 மகன்கள். இந்தநிலையில் மல்லிகாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், அவரின் இளைய மகன் மணிகண்டன் (வயது 25), என்பவருடன் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் அச்சரப்பாக்கம் மருத்துவமனைக்கு சென்றனர். அதன் பின்னர் சிகிச்சை முடிந்து இருவரும் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தனர்.

சித்தாமூர் ஊராட்சி ஒன்றியம் சின்ன கயப்பாக்கம் அருகே வந்த போது, அங்கு முன்னால் சென்ற டிராக்டரில் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மோதியதில் மணிகண்டன் (25) சம்பவ இடத்திலேயே பலியானார்.

தாய் படுகாயம்

இதுகுறித்து தகவல் அறிந்த அச்சரப்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, மணிகண்டன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தில் படுகாயமடைந்த அவரது தாய் மல்லிகாவை மீட்டு, தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து அச்சரப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் டி.எஸ்.சரவணன், சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றார்.

Next Story