கும்மிடிப்பூண்டியில் கண்ணன்கோட்டை-தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்க பணிகளை கலெக்டர் பார்வையிட்டார்


கும்மிடிப்பூண்டியில் கண்ணன்கோட்டை-தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்க பணிகளை கலெக்டர் பார்வையிட்டார்
x
தினத்தந்தி 15 Oct 2020 4:58 AM IST (Updated: 15 Oct 2020 4:58 AM IST)
t-max-icont-min-icon

கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் உள்ள கண்ணன்கோட்டை-தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்க பணிகளை மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கும்மிடிப்பூண்டி,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தை சேர்ந்த கண்ணன் கோட்டை மற்றும் தேர்வாய் கண்டிகை ஆகிய பகுதிகளில் உள்ள 2 பெரிய ஏரிகளை இணைத்து புதிய நீர்த்தேக்கம் உருவாக்கும் பணி தற்போது நிறைவு பெறும் தருவாயில் உள்ளது. இந்த நீர்த்தேக்கத்தில் ஆந்திர மாநிலத்தில் இருந்து வரும் கிருஷ்ணா நீரையும், பருவகாலங்களில் பொழியும் மழை நீரையும் சேமித்து சென்னை மாநகரின் குடிநீர்த்தேவைக்காக பயன்படுத்தப்பட உள்ளது.

சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கிவரும் பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய நீர்த்தேக்கங்களுடன் கூடுதலாக இந்த நீர்த்தேக்கமும் சேர்க்கப்பட உள்ளது.

கலெக்டர் ஆய்வு

சுமார் ரூ.380 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் இந்த நீர்த்தேக்க நிறைவு பணிகளை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் நேற்று நேரில் பார்வை யிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது, திட்ட இயக்குனர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை லோகநாயகி, கும்மிடிப்பூண்டி தாசில்தார் கதிர்வேல், வட்டார வளர்ச்சி அலுவலர் வாசுதேவன் ஆகியோர் உடன் இருந்தனர்.

இந்த ஆய்வின்போது மழைக்காலத்திற்கு முன்னதாக பணிகளை முடிக்குமாறு பொதுப்பணித்துறை அலுவலர்களிடம் மாவட்ட கலெக் டர் மகேஸ்வரி ரவிக்குமார் அறிவுறுத்தினார்.

Next Story