தென்காசியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
தென்காசி புதிய பஸ் நிலையம் அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தென்காசி,
தென்காசி புதிய பஸ் நிலையம் அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர். தென்காசி மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரியில் உள்நோயாளிகளின் படுக்கை எண்ணிக்கையை இரு மடங்காக உயர்த்த வேண்டும். இருதய நோய், நீரிழிவு நோய்களுக்கு தனியான சிறப்பு சிகிச்சை வார்டுகளை எற்படுத்த வேண்டும். விஷக்கடி சிகிச்சை பிரிவை அமைத்து அதற்கான விஷமுறிவு மருந்துகளும் போதிய அளவில் கைவசம் வைத்திட வேண்டும். பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப கூடுதலாக டாக்டர்களையும் செவிலியர்களையும் நியமித்திட வேண்டும். தென்காசியில் மருத்துவ கல்லூரி ஏற்படுத்த வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தாலுகா செயலாளர் அயூப்கான் தலைமை தாங்கினார். சி.பி.எம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கணபதி, மாவட்ட செயலாளர் கே.ஜி.பாஸ்கரன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் முத்துப்பாண்டி, வேல் மயில், பால்ராஜ், வேல்முருகன் வன்னியபெருமாள், தங்கம், வட்டார குழு உறுப்பினர்கள் லெனின் குமார், கண்ணன், அய்யப்பன், மாரியப்பன், சங்கரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story