விக்கிரவாண்டி வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. பாசறையில் உறுப்பினர் சேர்க்கை அமைச்சர் சி.வி.சண்முகம் தொடங்கி வைத்தார்
விக்கிரவாண்டி வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. பாசறையில் உறுப்பினர் சேர்க்கையை அமைச்சர் சி.வி.சண்முகம் தொடங்கி வைத்தார்.
விக்கிரவாண்டி,
விக்கிரவாண்டி வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை உறுப்பினர் சேர்க்கை மற்றும் ஆலோசனை கூட்டம் நேமூரில் நடந்தது. இதற்கு வடக்கு ஒன்றிய செயலாளர் எசாலம் பன்னீர் தலைமை தாங்கினார். முத்தமிழ்செல்வன் எம்.எல்.ஏ., மாவட்ட பாசறை செயலாளர் ஜெயபிரகாஷ், முன்னாள் ஒன்றிய செயலாளர் வேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டு பாசறை உறுப்பினர் சேர்க்கை முகாமை தொடங்கி வைத்து ஆலோசனை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் நம்பிக்கையோடும் பொறுமையோடும் உழைத்தால் அவர்களுக்கு உரிய காலத்தில் உரிய பதவிகள் வழங்கப்படும். இந்த ஆட்சி குறித்து மக்களிடம் நல்ல நம்பிக்கை உள்ளது. இதைப் பயன்படுத்தி நிர்வாகிகள் இளைஞர் மற்றும் இளம்பெண் பாசறை உறுப்பினர்களை அரவணைத்து ஒற்றுமையோடு செயல்பட வேண்டும். மீண்டும் 3-வது முறையாக அ.தி.மு.க. ஆட்சியை மலர செய்ய வேண்டியது இளைஞர்களாகிய உங்கள் கையில் தான் உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர் காமினி லட்சுமி நாராயணன், மாவட்ட தொழில் நுட்ப பிரிவு செயலாளர் முகமது ஷெரீப், இளைஞர் இளம்பெண்கள் பாசறை துணைத்தலைவர் பவித்ரா, ஒன்றிய தொழில்நுட்ப பிரிவு செயலாளர் அந்துவான், ஒன்றிய பாசறை செயலாளர் செந்தில்குமார், ஒன்றிய துணை செயலாளர் நேமூர் குமார், கிளைச் செயலாளர்கள் எண்ணாயிரம் கிருஷ்ணன், திருநந்திபுரம் அன்பரசன், தையல்காரர் நாராயணன், எசாலம் பெரியான், ஒன்றிய பொருளாளர் ராமச்சந்திரன், முன்னாள் கவுன்சிலர் புகழ், மாவட்ட வக்கீல் அணி ஆதிசங்கர், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் அமுதவல்லி, மாவட்ட இணை செயலாளர் ஸ்ரீதர், நிர்வாகிகள் துரைமுருகன், குண்டலபுலியூர் அண்ணாமலை, வீரப்பன், குமார், நாகராஜ், மாது ரங்கநாதன், தும்பூர் அருள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய பேரவை செயலாளர் சரவணகுமார் நன்றி கூறினார்.

Related Tags :
Next Story