தர்மபுரி-கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்த 112 மெட்ரிக்குலேசன் பள்ளிகளுக்கு தொடர் அங்கீகார ஆணை - அமைச்சர்கள் வழங்கினர்


தர்மபுரி-கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்த 112 மெட்ரிக்குலேசன் பள்ளிகளுக்கு தொடர் அங்கீகார ஆணை - அமைச்சர்கள் வழங்கினர்
x
தினத்தந்தி 15 Oct 2020 4:38 AM GMT (Updated: 15 Oct 2020 4:38 AM GMT)

தர்மபுரி-கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்த 112 மெட்ரிக்குலேசன் பள்ளிகளுக்கு தொடர் அங்கீகார ஆணையை அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.பி.அன்பழகன் ஆகியோர் வழங்கினர்.

தர்மபுரி,

தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்த மெட்ரிக்குலேசன் பள்ளிகளுக்கு தொடர் அங்கீகார ஆணை வழங்கும் விழா தர்மபுரி ஸ்ரீ விஜய் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர் மலர்விழி தலைமை தாங்கினார். மெட்ரிக் பள்ளிகள் இயக்ககத்தின் இயக்குனர் கருப்பசாமி வரவேற்று பேசினார். உதவி கலெக்டர் பிரதாப், எம்.எல்.ஏ.க்கள் கோவிந்தசாமி, ராஜேந்திரன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், மாவட்ட பால்வளத் தலைவர் டி.ஆர்.அன்பழகன், தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில செயலாளர் டி.என்.சி.இளங்கோவன், மாநில தலைவர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் தமிழக பள்ளிக் கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் ஆகியோர் கலந்துகொண்டு தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த 58 மெட்ரிக்குலேசன் பள்ளிகளுக்கும், கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த 54 மெட்ரிக்குலேசன் பள்ளிகளுக்கும் என மொத்தம் 112 பள்ளிகளுக்கு தொடர் அங்கீகார ஆணைகளை வழங்கினார்கள்.

விழாவில் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சிங்காரம், குப்புசாமி, ஒன்றியக்குழு தலைவர் நீலாபுரம் செல்வம், கூட்டுறவு பண்டகசாலை தலைவர் பூக்கடை ரவி, மத்திய கூட்டுறவு வங்கி துணை தலைவர் வேலுமணி, இயக்குனர் சிவப்பிரகாசம், கூட்டுறவு சங்க தலைவர்கள் மதிவாணன், பெரியண்ணன், பழனிசாமி, தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் நந்தகுமார், மாவட்ட நிர்வாகிகள் சக்திவேல், சுதாகரன் உள்பட தனியார் பள்ளி நிர்வாகிகள், அரசு அலுவலர்கள், கூட்டுறவு மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். முடிவில் முதன்மை கல்வி அலுவலர் முருகன் நன்றி கூறினார்.

Next Story