பாலியல் குற்ற சம்பவங்களை தடுக்க விழிப்புணர்வு: 5 நிமிட சபலத்திற்கு ஆசைப்பட்டால் 10 ஆண்டுகள் சிறை தண்டனை போலீஸ் சூப்பிரண்டு பேச்சு
5 நிமிட சபலத்திற்கு ஆசைப்பட்டால் 10 ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவிக்க நேரிடும் என போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பேசினார்.
புதுக்கோட்டை,
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பான வன்முறையற்ற சமூகத்தை உருவாக்கும் நோக்கில் கேடயம் எனும் திட்டம் திருச்சி சரக போலீஸ் டி.ஐ.ஜி. ஆனி விஜயாவால் கடந்த மாதம் 21-ந் தேதி தொடங்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்த திட்டத்தின் அறிமுகம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி டவுன் பகுதியில் ஒரு ஓட்டலில் நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படுவதை தடுக்க அனைவரும் ஒருங்கிணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
பெண்களின் அறியாமையையும், பயத்தையும் பயன்படுத்தி பாலியல் குற்றங்களில் அதிக ஆண்கள் ஈடுபடுகின்றனர். 18 வயதுக்குட்பட்ட சிறுமியை தவறாக தொட்டாலே 10 ஆண்டுகள் சிறை தண்டனை என்பதை எடுத்துரைக்க வேண்டும். 5 நிமிட சபலத்திற்கு ஆசைப்பட்டால் 10 ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவிக்க நேரிடும் என்பதை மக்களிடம் எடுத்துச்சொல்ல வேண்டும். யார் குற்றம் செய்கிறார்களோ இது அவர்களை சென்றடையும். அதேநேரத்தில் பெண்களிடமும், பெண் குழந்தைகளிடமும் யாரிடம் எவ்வாறு கவனமாக இருக்க வேண்டும் என்பதை விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
பாலியல் தொந்தரவுகளை பெண்களும் தைரியமாக போலீசாரிடம் புகார் தெரிவிக்கலாம். இதன் மூலம் பெண் குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள், பாலியல் சம்பவங்கள் குறையும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் கலெக்டர் உமாமகேஸ்வரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கேடயம் திட்டத்தை தொடங்கி வைத்து, பெண்கள், பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்பாக புகார் தெரிவிக்க வேண்டிய 93845 01999, 6383071800 ஆகிய செல்போன் எண்களை அறிமுகம் செய்து வைத்தார்.
நிகழ்ச்சியில் கலெக்டர் உமாமகேஸ்வரி பேசுகையில், குற்றங்களை கண்டறிவதில் தமிழ்நாடு காவல்துறை உலக அளவில் புகழ் பெற்றது. ‘இந்த சமூகத்தில் பெண் குழந்தையாக வாழ அற்புதம் என் நாட்டில் உள்ளது முதுமை வரை‘ என பாரதியார் கூறியதை உள்ளாற உணர வேண்டும். இந்த சமூகத்தில் நான் பெண்ணாக பிறந்ததற்கு கொடுத்து வைத்திருக்கிறேன் என நான் நினைத்துக்கொண்டிருக்கிறேன்“ என்றார்.
நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் ராஜேந்திரன், செரீனாபேகம், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் செந்தில்குமார், அருள்மொழி அரசு, தன்னார்வ தொண்டு நிறுவன ஒருங்கிணைப்பாளர் ரூபன் ராஜேஷ்கண்ணா உள்பட போலீசார், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story