திருச்சி மாநகராட்சி பகுதியில் வேகமெடுக்கும் பாதாள சாக்கடை திட்டப் பணிகள்
திருச்சி மாநகரில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் வேகமெடுக்க தொடங்கி உள்ளது.
திருச்சி,
திருச்சி மாநகராட்சியில் கடந்த 2017-ம் ஆண்டு அம்ரூத் திட்டத்தின்கீழ் வார்டு எண்: 31, 35, 36, 38, 42, 43, 45, 52, 53, 60 மற்றும் 63 ஆகிய 11 வார்டுகள் ஒரு பகுதியாகவும், வார்டுகள் 37, 39, 40 மற்றும் 41 ஆகியவை ஒரு பகுதியாகவும் மொத்தம் 15 வார்டுகளில் ரூ.312 கோடியே 14 லட்சம் மதிப்பீட்டில் பாதாள சாக்கடை திட்டம் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது.
இத்திட்டத்தின்கீழ் 331 கிலோ மீட்டர் நீளத்திற்கு கழிவுநீர் குழாய், 21.50 கிலோ மீட்டர் நீளத்திற்கு உந்து குழாய், 8, 690 ஆள்நுழை தொட்டிகள், 7 பம்பிங் ஸ்டேசன், 11 லிப்டிங் ஸ்டேஷன் அமைக்கப்பட்டு 32 ஆயிரம் வீடுகளுக்கு பாதாள சாக்கடை இணைப்புகள் வழங்கப்பட்டு விட்டது.
2-ம் கட்டம், 3-ம் கட்டம் என பாதாள சாக்கடை திட்டப்பணிகள் தொடர்ந்தாலும் இடையில் சற்று பணியில் தொய்வு ஏற்பட்டது.
இந்த நிலையில் தற்போது பாதாள சாக்கடை திட்டப்பணிகள் வேகமெடுக்க தொடங்கி உள்ளது. 3 ஆண்டுகளாக நடக்கும் பாதாள சாக்கடை திட்டப்பணியை விரைவில் முடிப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. திருச்சி பெரிய மிளகுபாறையில் பழைய கலெக்டர் அலுவலகம் செல்லும் வழியில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடந்து வந்தது. அங்கு ஆள்நுழை தொட்டிகள் அமைக்கப்பட்டு விட்டன. தற்போது பொக்லைன் எந்திரம் உதவியுடன் கழிவுநீர் குழாய் பதிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இதுபோல மாநகரில் கே.கே.நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பணிகள் அதிகாரிகளால் முடுக்கி விடப்பட்டுள்ளன.

Related Tags :
Next Story