வளசரவாக்கம் மண்டலத்தில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாதவர்களிடம் ரூ.19 லட்சம் அபராதம் வசூல் - சென்னை மாநகராட்சி தகவல்


வளசரவாக்கம் மண்டலத்தில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாதவர்களிடம் ரூ.19 லட்சம் அபராதம் வசூல் - சென்னை மாநகராட்சி தகவல்
x
தினத்தந்தி 15 Oct 2020 2:18 PM IST (Updated: 15 Oct 2020 2:18 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை மாநகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்து வருகின்றனர்.

சென்னை,

பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்கள், கடைகள், ஓட்டல்கள் மற்றும் தனிநபர்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்து வருகின்றனர்.

அந்தவகையில் வளசரவாக்கம் மண்டலத்தில் நேற்று முன்தினம் மட்டும் ரூ.2.37 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதுவரை வளசரவாக்கம் மண்டலத்தில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாதவர்களிடம் இருந்து ரூ.18.93 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் இதுநாள் வரை ரூ.2.65 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story