மாவட்ட செய்திகள்

சாராய விற்பனையில் ஈடுபட்ட 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது + "||" + Involved in the sale of alcohol 3 arrested under thuggery law

சாராய விற்பனையில் ஈடுபட்ட 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது

சாராய விற்பனையில் ஈடுபட்ட 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது
திருவண்ணாமலை மாவட்டத்தில் சாராய விற்பனையில் ஈடுபட்ட 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
திருவண்ணாமலை,

திருவண்ணாமலை நகர உட்கோட்ட உதவி போலீஸ் சூப்பிரண்டு கிரண்ஸ்ருதி தலைமையில் திருவண்ணாமலை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாரதி மற்றும் மங்கலம் போலீசார் இணைந்து மதுவிலக்கு தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது சாராயம் விற்பனையில் ஈடுபட்டிருந்த மங்கலம் பகுதியைச் சேர்ந்த பச்சையப்பன் (வயது 39) என்பவரை கைது செய்தனர்.

மேலும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி தலைமையில் போளூர் மதுவிலக்கு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் போலீசார் இணைந்து மதுவிலக்கு தேடுதல் வேட்டை நடத்தியதில் 2,625 லிட்டர் எரிசாராயம் கடத்திய விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகா கலையூர் கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் (35), போளூர் தாலுகா எட்டிவாடி கிராமத்தைச் சேர்ந்த அகஸ்டின் (45) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதில் கைது செய்யப்பட்ட ராமச்சந்திரன் என்பவர் மாநில அளவில் சாராய வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்ட பச்சையப்பன், ராமச்சந்திரன், அகஸ்டின் ஆகியோர் தொடர்ந்து சட்டவிரோத செயலில் ஈடுபட்டால் வந்ததாலும், அவர்களின் சட்டவிரோத செயலை கட்டுப்படுத்த வேண்டியும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கோரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் கலெக்டர் கந்தசாமிக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து கலெக்டரின் உத்தரவின் பேரில் அவர்கள் 3 பேரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.