மாவட்ட செய்திகள்

பண்டிகை காலம் தொடங்குவதால் மக்கள் விழிப்புடன் இருக்கவேண்டும் கவர்னர் கிரண்பெடி வேண்டுகோள் + "||" + Governor Kiranpedi urges people to be vigilant as the festive season begins

பண்டிகை காலம் தொடங்குவதால் மக்கள் விழிப்புடன் இருக்கவேண்டும் கவர்னர் கிரண்பெடி வேண்டுகோள்

பண்டிகை காலம் தொடங்குவதால் மக்கள் விழிப்புடன் இருக்கவேண்டும் கவர்னர் கிரண்பெடி வேண்டுகோள்
பண்டிகை காலம் தொடங்க இருப்பதால் புதுச்சேரி மக்கள் விழிப்புடன் இருக்கவேண்டும் என்று கவர்னர் கிரண்பெடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதுச்சேரி,

பண்டிகை காலத்தில் கோவில் விழாக்களுக்கு வருபவர்களின் எண்ணிக்கை மற்றும் நெரிசலான கடைப்பகுதிகளில் மக்கள் அதிகம் கூடுவதற்கு வாய்ப்பு உள்ளது. முதியவர்கள் அதிகம் வெளியே வந்துகொண்டு இருக்கிறார்கள். மக்கள் கூட்டமாக ஒன்றிணைந்து உணவை பகிர்ந்து கொள்வார்கள்.


இதுபோன்ற சூழலில் சுகாதாரம் குறைவதற்கு வாய்ப்பு உள்ளது. உள் அரங்குகள் மற்றும் நெரிசலான சமூக அரங்குகளில் அதிகமாக சேர்வார்கள். மூக்குக்கு கீழே முகமூடியை அணிந்து கொண்டு இருக்கிறார்கள். வாய் முழுமையாக மறைக்கப்படுவதில்லை.

விழிப்புடன் இருக்க...

மிகவும் கடின உழைப்பை செய்த நமது மருத்துவர்கள் குழுவின் முயற்சியால் டெங்கு மற்றும் கொரோனா கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும் துப்புரவு பணிகளை மேற்கொண்டு வரும் நமது பொதுப்பணித்துறை மற்றும் நகராட்சி ஊழியர்களும் சிறப்பாக செயல்பட்டு கொண்டு இருக்கின்றனர். வானிலையும் மழை மற்றும் குளிர் காற்றுடன் உள்ளது.

தற்போதுள்ள சூழலில் புதுச்சேரி மக்கள் விழிப்புடன் இருக்கவேண்டிய பொறுப்பு உள்ளது. சமூக இடைவெளியை பின்பற்றி நடக்கவும், முககவசத்தை சரியாக அணியவும், சுகாதாரத்துடன் செயல்படவும், கூட்டங்களில் பங்கேற்பதை தவிர்க்கவும் வேண்டும். மேலும் பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கும் இடங்களுக்கு செல்ல வேண்டாம்.

எந்தவொரு காய்ச்சலின் ஆரம்ப நிலையிலேயே பரிசோதனைக்கு அருகிலுள்ள ஆரம்ப சுகாதார மையத்துக்கு செல்ல வேண்டும். அல்லது நடமாடும் மருத்துவ குழுவை அழைக்கவும். மீண்டும் புதுச்சேரி பாதுகாப்பாக இருக்க பிரார்த்தனை செய்வோம்.

இவ்வாறு அந்த பதிவில் கவர்னர் கிரண்பெடி கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. 2020-2021-ம் ஆண்டிற்கு மின்சாரம் வாங்க ரூ.246 கோடி கவர்னர் கிரண்பெடி ஒப்புதல்
புதுச்சேரியில் 2020-2021-ம் ஆண்டிற்கு மின்சாரம் கொள்முதல் செய்ய ரூ.246 கோடி செலவுக்கு கவர்னர் கிரண்பெடி ஒப்புதல் அளித்துள்ளார்.
2. உள்ளாட்சி தேர்தல் மூலம் பெண்களுக்கு முக்கியத்துவம் கவர்னர் கிரண்பெடி நம்பிக்கை
உள்ளாட்சி தேர்தல் மூலம் பெண்களுக்கு முக்கியத்துவம் கிடை க்கும் என்று கவர்னர் கிரண்பெடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
3. சண்டே மார்க்கெட் கூட்டத்தை ஒழுங்குபடுத்த வேண்டும் கவர்னர் கிரண்பெடி அறிவுறுத்தல்
சண்டே மார்க்கெட்டுக்கு வரும் பொதுமக்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்த வேண்டும் என்று கவர்னர் கிரண்பெடி தெரிவித்துள்ளார்.
4. நுண்ணீர் பாசனத்திற்கு மானியம் விவசாயிகள் பயன்பெற வேண்டுகோள்
தென்காசி மாவட்டத்தில் நுண்ணீர் பாசனத்திற்கு மானியம் வழங்கப்படுகிறது. இதனை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் தெரிவித்துள்ளார்.
5. டிசம்பர் 31-ந் தேதி வரை மோட்டார் வாகன வரி செலுத்த கால அவகாசம் கவர்னர் கிரண்பெடி ஒப்புதல்
புதுச்சேரி அரசிடம் இருந்து கவர்னர் மாளிகைக்கு கடந்த 11-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை 32 கோப்புகள் வந்துள்ளன. இதில் பெரும்பாலான கோப்புகளுக்கு கவர்னர் கிரண்பெடி ஒப்புதல் அளித்துள்ளார்.