ஐகோர்ட்டு தீர்ப்புக்கு பிறகே சிறப்பு ஆசிரியர்கள் பணி நியமனம் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்


ஐகோர்ட்டு தீர்ப்புக்கு பிறகே சிறப்பு ஆசிரியர்கள் பணி நியமனம் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்
x
தினத்தந்தி 16 Oct 2020 6:04 AM IST (Updated: 16 Oct 2020 6:04 AM IST)
t-max-icont-min-icon

ஐகோர்ட்டு தீர்ப்புக்கு பிறகே சிறப்பு ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார்.

நம்பியூர்,

நம்பியூர் அருகே உள்ள சாவக்கட்டுபாளையத்தில் கைத்தறி நெசவாளர்களுக்கு காப்பீடு திட்ட அட்டைகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 460 பேருக்கு காப்பீடு திட்ட அட்டைகளை வழங்கி பேசினார். பின்னர் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அரசு பள்ளிக்கூட மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு செய்து சட்டம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இந்த சட்டத்துக்கான ஒப்புதலை பெற கவர்னரிடம் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசி உள்ளார். ஆசிரியர்கள் இடமாறுதல் குறித்து மதுரை மற்றும் சென்னை ஐகோர்ட்டுகள் தீர்ப்புகளை வழங்கி உள்ளன. இந்த தீர்ப்புகளை ஒருங்கிணைத்து பின்னர் கலந்தாய்வு நடத்தப்படும்.

சிறப்பு ஆசிரியர்கள்

சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் கணினி ஆசிரியர்களுக்கான பணி நியமன ஆணை தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது. எனவே தீர்ப்புக்கு பிறகே பணி நியமன ஆணை வழங்கப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

Next Story