மாவட்ட செய்திகள்

கருவேலங்காட்டில் வீசப்பட்ட பிறந்து சில மணி நேரமே ஆனபச்சிளம் குழந்தை மீட்பு - விருத்தாசலம் அருகே பரபரப்பு + "||" + Thrown Just a few hours after birth Born Child Recovery

கருவேலங்காட்டில் வீசப்பட்ட பிறந்து சில மணி நேரமே ஆனபச்சிளம் குழந்தை மீட்பு - விருத்தாசலம் அருகே பரபரப்பு

கருவேலங்காட்டில் வீசப்பட்ட பிறந்து சில மணி நேரமே ஆனபச்சிளம் குழந்தை மீட்பு - விருத்தாசலம் அருகே பரபரப்பு
விருத்தாசலம் அருகே கருவேலங்காட்டில் வீசப்பட்ட பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் குழந்தை மீட்கப்பட்டது.
விருத்தாசலம்,

விருத்தாசலம் அடுத்த பரவலூர் கிராமத்தில் முகுந்தநல்லூர் சாலை அருகே பாசன வாய்க்கால் ஓரமாக உள்ள கருவேலங் காட்டில் இருந்து நேற்று காலை பச்சிளம் குழந்தை அழும் சத்தம் கேட்டது. இதைத்தொடர்ந்து அந்த வழியாக சென்ற பொதுமக்கள், அந்த சத்தம் கேட்ட இடத்துக்கு சென்று பார்த்தனர். அப்போது அங்கு பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் குழந்தை ஒன்று கிடந்தது. இதைபார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அந்த குழந்தையை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த மருத்துவமனை ஊழியர்களிடம் குழந்தையை ஒப்படைத்தனர்.


இதுபற்றி அறிந்த விருத்தாசலம் போலீசார் மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதையடுத்து குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, கடலூர் சமூக நலத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. பச்சிளம் குழந்தையை கருவேலங்காட்டில் வீசி விட்டுச்சென்றவர்கள் யார்?, கள்ளத்தொடர்பில் பிறந்ததால் குழந்தையை விட்டுச்சென்றார்களா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.