மாவட்ட செய்திகள்

ஊராட்சி தலைவரை தரையில் அமர வைத்த சம்பவம்: ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் + "||" + Panchayat leader Laid on the floor Demonstration by rural development officers

ஊராட்சி தலைவரை தரையில் அமர வைத்த சம்பவம்: ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

ஊராட்சி தலைவரை தரையில் அமர வைத்த சம்பவம்: ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
ஊராட்சி மன்ற தலைவரை தரையில் அமர வைத்த சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பெரம்பலூர்,

கடலூர் மாவட்டம், தெற்கு திட்டை ஊராட்சி மன்ற தலைவரை தரையில் அமர வைத்த சம்பவத்தை கண்டித்தும், ஊராட்சி செயலாளர் சிந்துஜா மீதான வழக்குப்பதிவையும், அவரின் பணியிடை நீக்கத்தையும் ரத்து செய்யக்கோரியும் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட தலைவர் மரியதாஸ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பப்பட்டன.


இதேபோல, ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக உணவு இடைவேளையின்போது ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் சந்தானம் தலைமை தாங்கினார். ஒன்றிய பொறியாளர் நடராஜன் வரவேற்றார். சங்கத்தின் மாவட்ட துணைத்தலைவர் சி.பி.இராஜா கண்டன உரையாற்றினார். இதில், வட்டார வளர்ச்சி அலுவலர் அருளப்பன் (கிராம ஊராட்சி) மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி செயலாளர்கள், ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் முருகானந்தம் நன்றி கூறினார்.