மாவட்ட செய்திகள்

தங்கை கணவர் இறந்த சோகத்தில் மதுவில் விஷம் கலந்து குடித்து - பாத்திர வியாபாரி தற்கொலை + "||" + Sister husband In the tragedy of the dead Drinking poison mixed with alcohol Merchant commits suicide

தங்கை கணவர் இறந்த சோகத்தில் மதுவில் விஷம் கலந்து குடித்து - பாத்திர வியாபாரி தற்கொலை

தங்கை கணவர் இறந்த சோகத்தில் மதுவில் விஷம் கலந்து குடித்து - பாத்திர வியாபாரி தற்கொலை
கரூரில் தங்கை கணவர் இறந்த சோகத்தில் பாத்திர வியாபாரி மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கரூர்,

கரூர் தெற்கு காந்திகிராமம் டி.என்.எச்.பி. காலனியை சேர்ந்தவர் முத்துபாண்டியன் (வயது 48). பாத்திர வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில், முத்துபாண்டியனின் தங்கை கணவரான பொன்னுசாமி கடந்த 11-ந்தேதி உடல்நல குறைவால் இறந்து விட்டார்.


இதனால் பொன்னுசாமியின் மறைவை தாங்க முடியாமல் முத்துபாண்டியன் மிகவும் மனமுடைந்து காணப்பட்டார். இந்தநிலையில் கடந்த 13-ந்தேதி முத்துபாண்டியன் மதுவில் விஷம் கலந்து குடித்து வீட்டினுள் மயங்கி கிடந்தார்.

இதைக்கண்ட உறவினர்கள் முத்துபாண்டியனை மீட்டு சிகிச்சைக்காக கரூர் காந்திகிராமத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி முத்துபாண்டியன் நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார்.

இந்த தற்கொலை குறித்து தாந்தோணிமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். தங்கையின் கணவர் இறப்பை தாங்கிக்கொள்ள முடியாத நிலையில் பாத்திர வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.