மாவட்டத்தில் மேலும் 51 பேருக்கு கொரோனா


மாவட்டத்தில் மேலும் 51 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 16 Oct 2020 3:30 PM IST (Updated: 16 Oct 2020 3:17 PM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று மேலும் 51 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன் தினம் வரை 2 லட்சத்து 58 ஆயிரத்து 685 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் 15 ஆயிரத்து 896 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 4 ஆயிரத்து 503 பேரின் பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்படவில்லை.

14 ஆயிரத்து 488 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். முகாமில் 5 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 172 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று புதிதாக 51 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. முத்தால் நகரை சேர்ந்த 58 வயது பெண், ஆர்.ஆர்.நகரை சேர்ந்த 36 வயது நபர், குறவன் குளத்தை சேர்ந்த 24 வயது பெண், விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றும் 27 வயது நபர், பாளையம்பட்டியை சேர்ந்த 2 பேர், பந்தல்குடி, மந்திரி ஓடை உள்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்த 51 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன் மூலம் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 15 ஆயிரத்து 946 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 1,966 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் 4 ஆயிரத்து 503 பேருக்கு மருத்துவ பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்படவில்லை. மருத்துவ பரிசோதனை எண்ணிக்கை குறைந்துள்ள போதிலும், பாதிப்பு எண்ணிக்கை வழக்கத்தைவிட அதிகரித்து வருகிறது.

மாநில சுகாதாரத்துறை 51 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இருப்பினும் மாவட்ட சுகாதார துறை அதற்கான முழுமையான பட்டியலை வெளியிடவில்லை.

தொடர்ந்து மாவட்ட சுகாதார துறையினரின் நடைமுறைகளில் வெளிப்படை தன்மை இல்லை. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பின் உண்மை நிலவரத்தை மாவட்ட மக்கள் தெரிய முடியாத நிலை உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் இந்த முரண்பாடை தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Next Story